ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
ஆத்மவிபுலராய், உலக மானுட குலத்தார்க்கு அவரவர் தாம் எடுத்து வந்த மாமுனி வழியை, தொடுத்து வந்த சித்புஷ்பமாய் வாழையடி வாழையாய் புலர்வித்து, கிருபாசாகர முக்திக்கான திருவருளை - நீத்தார் வரிசைக்கும் (முன்னோர்கள், பித்ருக்கள்), நடப்பு கோசாரத் தலைமுறைக்கும் (தற்போதைய பூமிவாழ் தலைமுறை), ஏணிப்படி மாந்தர்களாம் மஹான்களின் கருணைக்காய் ஏங்கும் வருங்கால ஜீவபீஜங்களுக்கும் (சந்ததிகள்) -ஆகிய முத்தலை முறைகளுக்கும் திருவருளை குரு கடாட்சத்துடன் வராதாத்மிகமாய் வார்த்தளிக்கும் அகத்தியகுல ஜோதி வாரணச் சத்சங்கத்தவரும், சதுராவ்ருத்தி தர்ப்பண சாஹித்ய சாதனச் சித்புருஷரான ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய பித்ரு மகாத்மியங்களிலிருந்து குறிப்பு தொகுப்புகள்!
ஓம் பித்ரு ப்ரசன்ன பூம்யாய வித்மஹே
ஜெயக்ஷீராஸ் நாமாய தீமஹி
தந்நோ பித்ரு மூர்த்தி ப்ரசோதயாத்
ஓம் ஜீவநாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரு தேவ ப்ரசோதயாத்
முக்கியமான தர்ப்பண மந்திரங்களின் பொருள் : --
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத (திருப்தி ஆவீர்களாக) என்று மூன்று முறை சொல்லி வலதுகையை விரித்துக் கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களுக்கு இடைவழியே தீர்த்தத்தை எள்ளுடன் சேர்த்துத் தர்ப்பை நுனியின் மேல் சிறிது நீர் ஊற்றுதலே தர்ப்பணம் இடுதல்.
“குருந்தாய பித்ருச்ருதபலம், சிர்ரோப்பணம், தர்ப்பணம், அர்ப்பணம், சமர்ப்பணம்” என்பது பித்ரு வேத் ஸூக்த மகாமந்த்ர வாக்கியமாகும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
1. ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே
பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத
2. நீத்தார் நினைவோடு நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர்த்தாரை எள்ளோடு நுணல் தருப்பை யாவையுமாய்
மூத்தார் துதிபாடி மூலவரை யாம் பணிவோம்||
தர்ப்பண மந்திரங்கள் மிகவும் எளிமையானவையே.. எவருடைய உதவியுமின்றி, அனைவரும் எத்தகைய வேறுபாடுமின்றி தாங்களே இத்தகைய தர்ப்பண பூஜைகளைச் செய்யலாம்.
அடியார் : பெற்றோர்கள் இருக்கும்போது பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாமா? யாருக்கு? எப்போது?
சற்குரு: இவ்வாறு விளக்கங்கள் கேட்டால் தானே அறிவு விருத்தியாகும், அறியாமை போகும்! உதாரணமாக ஒரு கல்லூரி மாணவனுடைய அல்லது அலுவலகத்தில் பணிபுரிபவருடைய சக மாணவர், அலுவலர் இறந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். நன்கு நெருங்கிப் பழகிய அந்த இறந்தவருடைய வீட்டில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இல்லாவிடில் அந்த மாணவனோ, அலுவலகரோ, இறந்தவருக்காக அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த இறைப் பணியாகும், பெற்றோர்களும் இத்தகைய நற்காரியங்களை ஊக்குவிக்க வேண்டும்!
இவ்வாறாக எந்த ஒரு இறந்த ஜீவனுக்கும் எவரும் பித்ரு தர்ப்பணத்தைச் செய்யலாம். இதில் என்ன அறிய வேண்டுமெனில் அவரவர் வழித் தோன்றல்கள் குறித்த தர்ப்பணங்களைச் செய்வாராயின் அதி பரிபூரணமாக இருக்கும் அந்த வம்சாவளி நன்கு தழைக்கும். இல்லாவிடில் ஏனையோர் செய்தல் வேண்டும்.
தாய் தந்தை இருக்கையில் பிள்ளைகள் எள்ளைத் தொடலாகாது, தர்ப்பணம் செய்யலாகாது என்பது தவறான கருத்து. பெற்றோர்கள் உள்ள பிரம்மசாரிகள் செய்ய வேண்டிய நித்தியப் பூஜைகளுள் ஒன்றான பிரம்ம யக்ஞத்தில் தேவ, ரிஷித் தர்ப்பண மந்திரங்கள் உண்டே! தினசரி சந்தியா வந்தனத்திலும் யம வந்தனம், நவக்ரஹத் தர்ப்பண மந்திரங்கள் உள்ளனவே!
தற்காலத்தில் பெற்றோர்களே சந்தியா வந்தனம், பிரம்ம யக்ஞம், ஓளபாசனம், வைச்வதேவம் போன்ற நித்ய கர்மங்களைச் செய்யாததினால் அவர்களுக்கே மந்திரங்கள், சம்பிரதாயங்கள் தெரியாமற் போய்விட்டது. இதனால் தந்தைமார்களே இன்னமும் வருடக்கணக்காகப் புத்தகத்தைப் பார்த்து தர்ப்பணம் செய்கின்ற நிலையைப் பார்க்கின்றோம்! எளிய நியதிகளை என்று கற்றுக்கொண்டு செய்யப் போகின்றார்கள்? இத்தகைய நிலையில் தன் பிள்ளை தர்ப்பையைத் தொடக் கூடாது. எள்ளைத் தீண்டலாகாது, தர்ப்பணம் செய்யலாகாது என்று எண்ணுவது அறியாமையினால் தானே!
வம்சம் பற்றிய விளக்கங்கள்
தந்தை, தாய் வம்சங்களில் அவர்களுடைய அப்பா, அம்மா (தாத்தா , பாட்டி வரை) முறைகளில் 12 பேருக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். மூன்று தர்ப்பைகளை நேராக இடைவெளிவிட்டு இணையாகப் பரப்ப வேண்டும். இவை தந்தை வர்க்கத்தில் ஆறு பேர்களைக் குறிக்கின்றன.
தந்தை, தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் என்ற வகையில் இறந்த மூன்று பேர்களையும் அதே வரிசையில் குறிப்பதே இந்த மூன்று தர்ப்பைகளின் மேல் நுனிகளாகும். எவர் வாழ்கின்றாரோ அவரை விடுத்து அவர்தம் மூதாதையர்க்குத் தர்ப்பணம் அளிக்கவேண்டும்.
தந்தை வர்கத்தில் ஆறு பேர்களைக் குறிப்பதே இந்த மூன்று நேர் தர்ப்பைகளாகும். தந்தை, தாத்தா , பாட்டனார், முப்பாட்டனாருக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். தந்தை, தாத்தா இருவரும் இருப்பின், அவர்களுக்கு முந்திய மூவருக்குத் தர்ப்பணம் ஆகும். இறந்தவர்களுக்கு அளிப்பதே தர்ப்பணம் ஆகும்.
தர்பணத்தின் முதல் பகுதியில், தந்தை வர்கத்தில்
ஆண் வகை :- தந்தை , தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார்
பெண் வகை :- தாய், பாட்டி(தந்தை வழி) , கொள்ளுப் பட்டி(தந்தை வழி) எள்ளுப் பாட்டி(தந்தை வழி) ஆகிய ஆறுபேர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்பட வேண்டும்.
மூன்று நேர் தர்பைகளின் மேல் மூன்று நுனிகள் தந்தை வர்கத்தில் ஆண் வகையினரைக் குறிக்கின்றன, இம் மூன்று நேர் தர்பைகளின் கீழ் நுனிகள் தந்தை வர்கத்தில் பெண் வகையினரைக் குறிக்கின்றன. தாய் இருப்பின் (தந்தை வழிப்) பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி அல்லது முக்கொள்ளுப் பாட்டி என்றவாறாகத் தந்தை வர்கத்தில் மூன்று பெண்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
தர்ப்பணம் – இரண்டாம் நிலை
ஆண் வகை – தாத்தா , பாட்டனார், முப்பாட்டனார்
(தாய் வழி) பெண் வகை – பாட்டி, கொள்ளுப்பாட்டி, முக்கொள்ளுப்பாட்டி
இவ்வகையில் தாய் வர்கத்தினரின் ஆறு பேர்களுக்குத் தர்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறாக ஆறு கட்டை தர்பைகளை நேர், குறுக்காக அமைத்து 12 தர்பை நுனிகளில் எள் கலந்த நீரை, அந்தந்த மூதாதையரின் பெயரைச் சொல்லி ஊற்றுதலே தர்ப்பண பூஜையாகும்.
இவையெல்லாம் தர்ப்பணத்தின் பொதுநியதிகளாம், நேராகவும் குறுக்காகவும் தர்ப்பைகளை வைத்தபின் படத்தில் உள்ளவாறு ‘தர்ப்பண தர்பை சட்டம்’ அமையும். குடும்ப பெரியோர்களிடம் விசாரித்து முதலில் 12 மூதாதையர்களுடைய பெயர்களைத் தெரிந்து கொள்வது அவசியம். பெயர் தெரியாவிடில் அவர்களின் நினைவு அவசியமாகும். உருவத்தைப் பாத்திராமல், பெயரும், தெரியாவிடில் பாட்டி, கொள்ளுப் பாட்டி என்ற உறவையேனும் நினைவுகூறல் வேண்டும்.
1. தர்ப்பண மந்திரம் அறிந்திருந்தால், அம்மந்திரம் சொல்லி எள் கலந்த நீரை வலது கட்டை விரல் ஆள்காட்டி விரல்களுக்கிடையில் நீரை வார்த்துத் தர்ப்பணமிட வேண்டும்.
2. தர்ப்பண மந்திரத்தை அறியாவிடில் இறந்தவர்களின் பெயரைச் சொல்லி மேற்கண்ட முறையில் தர்ப்பண நீரை வார்க்க வேண்டும்.
kindly. note:- just collection of 300 pitru namas from SriVathiyars books & sources! more updates spell checks to be done yet!
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
பித்ரு போற்றிகள்
1. ஓம் ஸ்ரீபிதுர்மோக்ஷ லோக கணபதி போற்றி
2. ஓம் ஸ்ரீமன்சூரிய நாராயண மூர்த்தியே போற்றி
3. ஓம் ஸ்ரீபிதுர்மோட்ச லிங்க மூர்த்தியே போற்றி
4. ஓம் ஸ்ரீசர்வாம்ய வசு ருத்ராத்திய மூர்த்தியே போற்றி
5. ஓம் ஸ்ரீவிஸ்வே தேவா பித்ரு மூர்த்தியே போற்றி
6. ஓம் ஸ்ரீசதுர்யுக பித்ரு மூர்த்தியே போற்றி
7. ஓம் ஸ்ரீசர்வக்ஞான பித்ரு மூர்த்தியே போற்றி
8. ஓம் ஸ்ரீபிரம்மலோக பித்ரு மூர்த்தியே போற்றி
9. ஓம் ஸ்ரீசிவலோக பித்ரு மூர்த்தியே போற்றி
10. ஓம் ஸ்ரீவிஷ்ணுலோக பித்ரு மூர்த்தியே போற்றி
11. ஓம் ஸ்ரீமும்மூர்த்தி லோக பித்ரு மூர்த்தியே போற்றி
12. ஓம் ஸ்ரீசக்திலோக பித்ரு மூர்த்தியே போற்றி
13. ஓம் ஸ்ரீஸ்கந்தலோக பித்ரு மூர்த்தியே போற்றி
14. ஓம் ஸ்ரீமுக்திபுல பித்ரு மூர்த்தியே போற்றி
15. ஓம் ஸ்ரீசிராத்த லோக பித்ரு மூர்த்தியே போற்றி
16. ஓம் ஸ்ரீதர்ப்பண லோக பித்ரு மூர்த்தியே போற்றி
17. ஓம் ஸ்ரீமோக்ஷமார்க பித்ரு மூர்த்தியே போற்றி
18. ஓம் ஸ்ரீமுக்தஜோதி பித்ரு மூர்த்தியே போற்றி
19. ஓம் ஸ்ரீமுக்திசுத பித்ரு மூர்த்தியே போற்றி
20. ஓம் ஸ்ரீமுக்திவாரண பித்ரு மூர்த்தியே போற்றி
21. ஓம் ஸ்ரீதனுஷ்கோடிபதி பித்ரு மூர்த்தியே போற்றி
22. ஓம் ஸ்ரீவாஞ்சாபதி பித்ரு மூர்த்தியே போற்றி
23. ஓம் ஸ்ரீகாஸியம்பதி பித்ரு மூர்த்தியே போற்றி
24. ஓம் ஸ்ரீராமேஸ்வரபதி பித்ரு மூர்த்தியே போற்றி
25. ஓம் ஸ்ரீகயாபதி பித்ரு மூர்த்தியே போற்றி
26. ஓம் ஸ்ரீப்ரயாக க்ஷேத்ர பித்ரு மூர்த்தியே போற்றி
27. ஓம் ஸ்ரீபத்ரீபதி பித்ரு மூர்த்தியே போற்றி
28. ஓம் ஸ்ரீபிரம்மகபாலபதி பித்ரு மூர்த்தியே போற்றி
29. ஓம் ஸ்ரீஸ்வேதாரண்ய பித்ரு மூர்த்தியே போற்றி
30. ஓம் ஸ்ரீவேதாரண்ய பித்ரு மூர்த்தியே போற்றி
31. ஓம் ஸ்ரீவில்வாரண்ய பித்ரு மூர்த்தியே போற்றி
32. ஓம் ஸ்ரீதுளஸி வன பித்ரு மூர்த்தியே போற்றி
33. ஓம் ஸ்ரீதர்பாரண்ய பித்ரு மூர்த்தியே போற்றி
34. ஓம் ஸ்ரீதிலாரண்ய பித்ரு மூர்த்தியே போற்றி
35. ஓம் ஸ்ரீஜலசமுத்ர பித்ரு மூர்த்தியே போற்றி
36. ஓம் ஸ்ரீஇக்ஷுசமுத்ர பித்ரு மூர்த்தியே போற்றி
37. ஓம் ஸ்ரீஅம்ருத சமுத்ர பித்ரு மூர்த்தியே போற்றி
38. ஓம் ஸ்ரீக்ஷீர சமுத்ர பித்ரு மூர்த்தியே போற்றி
39. ஓம் ஸ்ரீஸர்வ ஜீவமுக்தி பித்ரு மூர்த்தியே போற்றி
40. ஓம் ஸ்ரீபிதுர்முக்தி லிங்க மூர்த்தியே போற்றி
41. ஓம் ஸ்ரீவசு பித்ரு மூர்த்திகள் போற்றி
42. ஓம் ஸ்ரீருத்ரப் பித்ரு மூர்த்திகள் போற்றி
43. ஓம் ஸ்ரீஆதித்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி
44. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ரு மூர்த்திகள் போற்றி
45. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு மூர்த்திகள் போற்றி
46. ஓம் ஸ்ரீசரயு பித்ரு மூர்த்திகள் போற்றி
47. ஓம் ஸ்ரீகும்ப சோபித பித்ரு மூர்த்திகள் போற்றி
48. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ரு மூர்த்திகள் போற்றி
49. ஓம் ஸ்ரீருத்ர தரணி பந்து பித்ரு மூர்த்திகள் போற்றி
50. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ரு மூர்த்திகள் போற்றி
51. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரிபித்ரு மூர்த்திகள் போற்றி
52. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ரு மூர்த்திகள் போற்றி
53. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ரு மூர்த்திகள் போற்றி
54. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ரு மூர்த்திகள் போற்றி
55. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ரு மூர்த்திகள் போற்றி
56. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ரு மூர்த்திகள் போற்றி
57. ஓம் ஸ்ரீசதவேத பித்ரு பித்ரு மூர்த்திகள் போற்றி
58. ஓம் ஸ்ரீமேத விதான பித்ரு மூர்த்திகள் போற்றி
59. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ரு மூர்த்திகள் போற்றி
60. ஓம் ஸ்ரீபார்திப லோக பித்ரு மூர்த்திகள் போற்றி
61. ஓம் ஸ்ரீபரிதி ப்ருத்விக் பித்ரு மூர்த்திகள் போற்றி
62. ஓம் ஸ்ரீகோதாயன பித்ரு மூர்த்திகள் போற்றி
63. ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ரு மூர்த்திகள் போற்றி
64. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு மூர்த்திகள் போற்றி
65. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ரு மூர்த்திகள் போற்றி
66. ஓம் ஸ்ரீவரிவஸ்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி
67. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு மூர்த்திகள் போற்றி
68. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ரு மூர்த்திகள் போற்றி
69. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
70. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ரு மூர்த்திகள் போற்றி
71. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு மூர்த்திகள் போற்றி
72. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ரு மூர்த்திகள் போற்றி
73. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு மூர்த்திகள் போற்றி
74. ஓம் ஸ்ரீபவ க்ஷீராஸ் பித்ரு மூர்த்திகள் போற்றி
75. ஓம் ஸ்ரீகாரணீய பித்ரு மூர்த்திகள் போற்றி
76. ஓம் ஸ்ரீச்ராவண பித்ரு மூர்த்திகள் போற்றி
77. ஓம் ஸ்ரீவாமன கண பித்ரு மூர்த்திகள் போற்றி
78. ஓம் ஸ்ரீசாண்டில்யப் பித்ரு மூர்த்திகள் போற்றி
79. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு மூர்த்திகள் போற்றி
80. ஓம் ஸ்ரீதச பூர்வ பித்ரு மூர்த்திகள் போற்றி
81. ஓம் ஸ்ரீவாயு பித்ரு மூர்த்திகள் போற்றி
82. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ரு மூர்த்திகள் போற்றி
83. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு மூர்த்திகள் போற்றி
84. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு மூர்த்திகள் போற்றி
85. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ரு மூர்த்திகள் போற்றி
86. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ரு மூர்த்திகள் போற்றி
87. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ரு மூர்த்திகள் போற்றி
88. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ரு மூர்த்திகள் போற்றி
89. ஓம் ஸ்ரீவாதுல்ய தரணிப் பித்ரு மூர்த்திகள் போற்றி
90. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ரு மூர்த்திகள் போற்றி
91. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு மூர்த்திகள் போற்றி
92. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ரு மூர்த்திகள் போற்றி
93. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ரு மூர்த்திகள் போற்றி
94. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ரு மூர்த்திகள் போற்றி
95. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு மூர்த்திகள் போற்றி
96. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருக்கள் போற்றி
97. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருக்கள் போற்றி
98. ஓம் ஸ்ரீபிரகத பித்ருக்கள் போற்றி
99. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருக்கள் போற்றி
100. ஓம் ஸ்ரீசகஸ்ரப் பித்ருக்கள் போற்றி
101. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷணர்கள் போற்றி
102. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர்கள் போற்றி
103. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலகர்கள் போற்றி
104. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு மூர்த்திகள் போற்றி
105. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ரு மூர்த்திகள் போற்றி
106. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ரு மூர்த்திகள் போற்றி
107. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ரு மூர்த்திகள் போற்றி
108. ஓம் ஸ்ரீசந்தன சந்த்ராதித்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
109. ஓம் ஸ்ரீகல்பித பித்ருக்கள் போற்றி
110. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருக்கள் போற்றி
111. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
112. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
113. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு மூர்த்திகள் போற்றி
114. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ரு மூர்த்திகள் போற்றி
115. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
116. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
117. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
118. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்க தரிசி பித்ரு மூர்த்திகள் போற்றி
119. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு மூர்த்திகள் போற்றி
120. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
121. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ரு மூர்த்திகள் போற்றி
122. ஓம் ஸ்ரீஜல தீப பித்ரு மூர்த்திகள் போற்றி
123. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
124. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ரு மூர்த்திகள் போற்றி
125. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
126. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
127. ஓம் ஸ்ரீகாயத்ரீ மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
128. ஓம் ஸ்ரீகாமேஸ்வர பித்ரு மூர்த்திகள் போற்றி
129. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ரு மூர்த்திகள் போற்றி
130. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ரு மூர்த்திகள் போற்றி
131. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
132. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு மூர்த்திகள் போற்றி
133. ஓம் ஸ்ரீகர்த்தம பித்ரு மூர்த்திகள் போற்றி
134. ஓம் ஸ்ரீதரணி பித்ரு மூர்த்திகள் போற்றி
135. ஓம் ஸ்ரீபித்ரு மஹாதேவதைகள் போற்றி
136. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
137. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு மூர்த்திகள் போற்றி
138. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு மூர்த்திகள் போற்றி
139. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ரு மூர்த்திகள் போற்றி
140. ஓம் ஸ்ரீபித்ரு கணங்களே போற்றி
141. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி
142. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி
143. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி
144. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி
145. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி
146. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள் மூர்த்திகள் போற்றி
147. ஓம் ஸ்ரீ ஸ்ரீகண பித்ருக்கள் போற்றி
148. ஓம் ஸ்ரீகூரமால்ய பித்ருக்கள் போற்றி
149. ஓம் ஸ்ரீமுகுந்த கீர்த்தி பித்ருக்கள் போற்றி
150. ஓம் ஸ்ரீபண்டசாலப் பித்ருக்கள் போற்றி
151. ஓம் ஸ்ரீமாதவீயப் பித்ருக்கள் போற்றி
152. ஓம் ஸ்ரீசோமாதித்ய பித்ருக்கள் போற்றி
153. ஓம் ஸ்ரீவாஸ்தாம்பரப் பித்ருலோக பித்ருக்கள் போற்றி
154. ஓம் ஸ்ரீசப்தாம்பரப் பித்ருக்கள் போற்றி
155. ஓம் ஸ்ரீருத்ர பூமி பித்ருக்கள் போற்றி
156. ஓம் ஸ்ரீகீரபாவன பித்ரு சக்தி பித்ருக்கள் போற்றி
157. ஓம் ஸ்ரீகோமுக்தி லோக பித்ருக்கள் போற்றி
158. ஓம் ஸ்ரீத்ரயஷட்காரப் பித்ரு மண்டல தேவதைகள் போற்றி
159. ஓம் ஸ்ரீமங்கல சுத்திப் பித்ருக்கள் போற்றி
160. ஓம் ஸ்ரீஜலபூபதிப் பித்ருக்கள் போற்றி
161. ஓம் ஸ்ரீபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
162. ஓம் ஸ்ரீவித்யாதரப் பித்ருக்கள் போற்றி
163. ஓம் ஸ்ரீகஜபித்ரு மூர்த்திகள் போற்றி
164. ஓம் ஸ்ரீதாமோதரப் பவித்திரர்கள் போற்றி
165. ஓம் ஸ்ரீஜெயபூரணப் பித்ருக்கள் போற்றி
166. ஓம் ஸ்ரீநாதவப் பதிதப் பித்ருக்கள் போற்றி
167. ஓம் ஸ்ரீஞானப்பதிகள் பித்ருக்கள் போற்றி
168. ஓம் ஸ்ரீபுஷ்ப தோடர்கள் பித்ருக்கள் போற்றி
169. ஓம் ஸ்ரீகோமளப் பித்ருக்கள் போற்றி
170. ஓம் ஸ்ரீஆதூலப் பித்ருக்கள் போற்றி
171. ஓம் ஸ்ரீபுருஷமாத்ரயப் பித்ரு பத்னிகள் போற்றி
172. ஓம் ஸ்ரீராஜலோசனப் பித்ரு பத்னிகள் போற்றி
173. ஓம் ஸ்ரீசந்தானலோக பித்ருக்கள் போற்றி
174. ஓம் ஸ்ரீபிருந்தசாரண்யப் பித்ருக்கள் போற்றி
175. ஓம் ஸ்ரீமாலா புரயதீயர்கள் பித்ருக்கள் போற்றி
176. ஓம் ஸ்ரீமருத்துவப் பித்ருக்கள் போற்றி
177. ஓம் ஸ்ரீவைதேஹி லோக பித்ருக்கள் போற்றி
178. ஓம் ஸ்ரீகுருமாதவ மண்டல பித்ருக்கள் போற்றி
179. ஓம் ஸ்ரீகோபரிப் பித்ருக்கள் போற்றி
180. ஓம் ஸ்ரீ ஸ்ரீமுகபரப் பித்ருக்கள் போற்றி
181. ஓம் ஸ்ரீபாஸ்கராச்சார்ய பித்ரு தரிசன சக்திகள் போற்றி
182. ஓம் ஸ்ரீவாரணதேவப் பித்ருக்கள் போற்றி
183. ஓம் ஸ்ரீபித்ரு தேவபூஷணர்கள் போற்றி
184. ஓம் ஸ்ரீசிவலோக மார்கப் பித்ருக்கள் போற்றி
185. ஓம் ஸ்ரீபாஸ்கர மண்டல பித்ருக்கள் போற்றி
186. ஓம் ஸ்ரீ ஸ்ரீவித்யா உபாசகப் பித்ருக்கள் போற்றி
187. ஓம் ஸ்ரீஅமிர்த லிங்க மண்டல பித்ருக்கள் போற்றி
188. ஓம் ஸ்ரீசந்தான கணபதி லோக பித்ருக்கள் போற்றி
189. ஓம் ஸ்ரீதனசஞ்சயப் பித்ருக்கள் போற்றி
190. ஓம் ஸ்ரீதீர்த்த வரவாரிப் பித்ருக்கள் போற்றி
191. ஓம் ஸ்ரீபார்சுவப் பராதீய பித்ருக்கள் போற்றி
192. ஓம் ஸ்ரீபிஞ்சாலப் பித்ருக்கள் போற்றி
193. ஓம் ஸ்ரீபிருத்வி மண்டல பித்ருக்கள் போற்றி
194. ஓம் ஸ்ரீவசுந்தரா லோக பித்ருக்கள் போற்றி
195. ஓம் ஸ்ரீகுணசோபித பித்ருக்கள் போற்றி
196. ஓம் ஸ்ரீபராய்கீத பித்ரு மூர்த்திகள் போற்றி
197. ஓம் ஸ்ரீஹராஸ்ச தாராவதி நட்சத்திர மண்டல பித்ருக்கள் போற்றி
198. ஓம் ஸ்ரீமகரலோக பித்ருக்கள் போற்றி
199. ஓம் ஸ்ரீதாணுமாலய பித்ருக்கள் போற்றி
200. ஓம் ஸ்ரீநெடும்பல பூஜ்யஸ்ரீ பித்ருக்கள் போற்றி
201. ஓம் ஸ்ரீபித்ரு தேவதைகள் போற்றி
202. ஓம் ஸ்ரீஸ்வயம்ஸ்ரீ பித்ருக்கள் போற்றி
203. ஓம் ஸ்ரீதிலசௌந்தர்ய பித்ரு தேவதைகள் போற்றி
204. ஓம் ஸ்ரீவிஜய பித்ருக்கள் போற்றி
205. ஓம் ஸ்ரீமாளயபூஷித யதி மண்டலம் போற்றி
206. ஓம் ஸ்ரீவேதகாந்த அலரிபுஷ்ப தான பித்ருக்கள் போற்றி
207. ஓம் ஸ்ரீகும்ப மூலிகா சக்தி தான பித்ருக்கள் போற்றி
208. ஓம் ஸ்ரீமகரபாஷ்ய புஷ்ப தான பித்ருக்கள் போற்றி
209. ஓம் ஸ்ரீசூர்யவம்சப் பித்ருக்கள் போற்றி
210. ஓம் ஸ்ரீகாணாபத்யபதி பித்ரு மூர்த்தியே போற்றி
211. ஓம் ஸ்ரீமுப்பத்து மூன்று கோடி பித்ருக்கள் போற்றி
212. ஓம் ஸ்ரீபார்த்திப பரசித்விக்குகள் போற்றி
213. ஓம் ஸ்ரீஹரிசோபித பகவத் சக்தி பித்ருக்கள் போற்றி
214. ஓம் ஸ்ரீபரிதி பவித்திர பித்ருக்கள் போற்றி
215. ஓம் ஸ்ரீதீர்த்தகோடிப் பித்ருக்கள் போற்றி
216. ஓம் ஸ்ரீபித்ரு ரிஷி மண்டல மூர்த்திகள் போற்றி
217. ஓம் ஸ்ரீபித்ரு பாதங்கள் மண்டல மூர்த்திகள் போற்றி
218. ஓம் ஸ்ரீமாத்ரு மண்டல பித்ருக்கள் போற்றி
219. ஓம் ஸ்ரீசிவசுதப் பித்ருக்கள் போற்றி
220. ஓம் ஸ்ரீஅட்சர பலதாரணப் பித்ருக்கள் போற்றி
221. ஓம் ஸ்ரீஷோபன க்ஷேமப் பித்ருக்கள் போற்றி
222. ஓம் ஸ்ரீபூவாளூர் பல்குனி நதிதீர பித்ரு காவல்தேவ மூர்த்திகள் போற்றி
223. ஓம் ஸ்ரீபிப்பலப் பித்ரு தேவர்கள் போற்றி
224. ஓம் ஸ்ரீபுத்ரஜித் பித்ருக்கள் போற்றி
225. ஓம் ஸ்ரீகாமியப் பித்ருக்கள் போற்றி
226. ஓம் ஸ்ரீபூம்யப் பித்ருக்கள் போற்றி
227. ஓம் ஸ்ரீவாஸ்து சுகுண பிரம்ம பித்ரு லோக பித்ருக்கள் போற்றி
228. ஓம் ஸ்ரீபாரத தீப கற்ப பித்ருக்கள் போற்றி – இந்தியா
229. ஓம் ஸ்ரீபோதி பாத மண்டல பித்ருக்கள் போற்றி – திபேத்
230. ஓம் ஸ்ரீதச சாந்தி தீப மண்டல பித்ருக்கள் போற்றி – ஸ்ரீலங்கா
231. ஓம் ஸ்ரீபோயாங்கு தீப மண்டல பித்ருக்கள் போற்றி – சீனா
232. ஓம் ஸ்ரீசங்கநாத தீப மண்டல பித்ருக்கள் போற்றி – ஜப்பான்
233. ஓம் ஸ்ரீகாரடையான் தீப மண்டல பித்ருக்கள் போற்றி – பர்மா
234. ஓம் ஸ்ரீகூடெழும்புகூட்டு பரமண்டல பித்ருக்கள் போற்றி – கம்போடியா
235. ஓம் ஸ்ரீஇல்லிக்கண்ணி காரடையான் தீபமண்டல பித்ருக்கள் போற்றி – தாய்லாந்து
236. ஓம் ஸ்ரீகர்ஜனை சாதனை தீபமண்டல பித்ருக்கள் போற்றி – சிங்கப்பூர்
237. ஓம் ஸ்ரீசுங்கபட்டாணி தீபமண்டல பித்ருக்கள் போற்றி – மலேசியா
238. ஓம் ஸ்ரீசுகர்ணோநாதி தீபமண்டல பித்ருக்கள் போற்றி – இந்தோனேசியா
239. ஓம் ஸ்ரீபிரவாகை நீர்த்தாரை தீப மண்டல பித்ருக்கள் போற்றி – வடஅமெரிக்கா
240. ஓம் ஸ்ரீநீள்நதி நிலமண்டல பித்ருக்கள் போற்றி – தென் அமெரிக்கா
241. ஓம் ஸ்ரீபணிபூசுங்க மண்டல பித்ருக்கள் போற்றி – கனடா
242. ஓம் ஸ்ரீகுதியாட்ட கூர்மண்டல பித்ருக்கள் போற்றி – ஆஸ்திரேலியா
243. ஓம் ஸ்ரீபூனைக்கண் தீபமண்டல பித்ருக்கள் போற்றி – இங்கிலாந்து
244. ஓம் ஸ்ரீசப்த தீப மண்டல பித்ருக்கள் போற்றி – ஜெர்மனி
245. ஓம் ஸ்ரீதோணி சாதனை தீப மண்டல பித்ருக்கள் போற்றி – ஸ்பெயின்
246. ஓம் ஸ்ரீகந்தபூரி மண்டல பித்ருக்கள் போற்றி – பிரான்ஸ்
247. ஓம் ஸ்ரீவல்லநாடி மண்டல பித்ருக்கள் போற்றி – இத்தாலி
248. ஓம் ஸ்ரீஐக்கிய சித்தி தீப மண்டல பித்ருக்கள் போற்றி – ரஷ்யா
249. ஓம் ஸ்ரீஹவிமுக்தேஸ்வர மாருதி போற்றி
250. ஓம் ஸ்ரீபித்ரு கூப லிங்கம் போற்றி
251. ஓம் ஸ்ரீபித்ரு வாச லிங்கம் போற்றி
252. ஓம் ஸ்ரீதுவாதச பித்ருபடிகள் போற்றி
253. ஓம் ஸ்ரீபித்ருரூபர் ஏகாதச ருத்திரர் போற்றி
254. ஓம் ஸ்ரீஆதிமூல பித்ரு சாவர்ணிகள் மனுக்கள் போற்றி
255. ஓம் ஸ்ரீபலித்ருவ பித்ரு ஹோம ஜோதி போற்றி
256. ஓம் ஸ்ரீஅருணாசல பித்ரு முக்தி தீர்த்தம் போற்றி
257. ஓம் ஸ்ரீசியாத்தமங்கை அமாவாசைத் தீர்த்தம் போற்றி
258. ஓம் ஸ்ரீபரியாமருதுப்பட்டி சர்வானந்த தீர்த்தம் போற்றி
259. ஓம் ஸ்ரீதிருவள்ளூர் பித்ரு சாந்தி தீர்த்தம் போற்றி
260. ஓம் ஸ்ரீநேமம் அஷ்டவிம்சத்வதித் தீர்த்தபாத பூஜா சக்தி போற்றி
261. ஓம் ஸ்ரீதிருவிடமருதூர் பித்ரு முக்தி – மோட்ச தீர்த்தம் போற்றி
262. ஓம் ஸ்ரீநெடுங்குடி பித்ரு க்ஷேத்ரம் போற்றி
263. ஓம் ஸ்ரீதிருவிடைமருதூர் காருண்ய தீர்த்தம் போற்றி
264. ஓம் ஸ்ரீஅகஸ்த்யமுனிகிராம பித்ரு க்ஷேத்ரம் போற்றி
265. ஓம் ஸ்ரீகுருவிராமேஸ்வரம் பித்ரு க்ஷேத்ரம் போற்றி
266. ஓம் ஸ்ரீவிளங்குளம் பித்ரு க்ஷேத்ரம் போற்றி
267. ஓம் ஸ்ரீதிருத்தவத்துறை சிவகங்கைத் தீர்த்தம் போற்றி
268. ஓம் ஸ்ரீகயாசுரமகரிஷி தந்தை தேவவிரஜன் போற்றி
269. ஓம் ஸ்ரீபூவாளூர்கயா ருத்ர பல்குனி சித்தர் போற்றி
270. ஓம் ஸ்ரீமணமேல்குடி பித்ரு க்ஷேத்ரம் போற்றி
271. ஓம் ஸ்ரீமஹா மக திருக்குளம் தீர்த்தம் போற்றி
272. ஓம் ஸ்ரீ ஸ்ரீசைலம் பித்ரு க்ஷேத்ரம் போற்றி
273. ஓம் ஸ்ரீகாஞ்சாத்து மலை தீர்த்தம் போற்றி
274. ஓம் ஸ்ரீதிருமழபாடி பித்ரு க்ஷேத்ரம் போற்றி
275. ஓம் ஸ்ரீஆவுடையார்கோயில் தீர்த்தம் போற்றி
276. ஓம் ஸ்ரீதிருவாரூர் க்ஷேத்ரம் தீர்த்தம் போற்றி
277. ஓம் ஸ்ரீவிரிஞ்சிபுரம் க்ஷேத்ரம் போற்றி
278. ஓம் ஸ்ரீசோம பாஸ்கரச் சாயாம்பரத் தீர்த்தம் போற்றி
279. ஓம் ஸ்ரீசக்கரப்படித்துறை தீர்த்தம் போற்றி
280. ஓம் ஸ்ரீஅம்மாமண்டபம் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரம் காவேரி தீர்த்தம் போற்றி
281. ஓம் ஸ்ரீசேஷம்பாடி பித்ரு க்ஷேத்ரம் போற்றி
282. ஓம் ஸ்ரீதிருமாந்துறை அன்பில் திரிவேணி சங்கமம் போற்றி
283. ஓம் ஸ்ரீபவானி முக்கூடல் போற்றி
284. ஓம் ஸ்ரீதிருக்கோளக்குடி க்ஷேத்ரம் போற்றி
285. ஓம் ஸ்ரீசெவலூர் பிருத்வித் தீர்த்தம் க்ஷேத்ரம் போற்றி
286. ஓம் ஸ்ரீதிருவையாறு க்ஷேத்ரம் தீர்த்தம் போற்றி
287. ஓம் ஸ்ரீதேனிமலை க்ஷேத்ரம் தீர்த்தம் போற்றி
288. ஓம் ஸ்ரீதிருக்கோளக்குடி க்ஷேத்ரம் போற்றி
289. ஓம் ஸ்ரீகுருவித்துறை க்ஷேத்ரம் போற்றி
290. ஓம் ஸ்ரீதிருவஹீந்திபுரம் கருட தீர்த்தம் போற்றி
291. ஓம் ஸ்ரீபேரூர் நொய்யல் தீர்த்த க்ஷேத்ரம் போற்றி
292. ஓம் ஸ்ரீதாமிரபரணி தீர்த்த பித்ரு க்ஷேத்திரங்கள் போற்றி
293. ஓம் ஸ்ரீகாலகம், போலகம் பித்ருக்ஷேத்திரங்கள் போற்றி
294. ஓம் ஸ்ரீஅரசர்கோயில் க்ஷேத்ரம் போற்றி
295. ஓம் ஸ்ரீகொன்றையடி பித்ரு க்ஷேத்ரம் போற்றி
296. ஓம் ஸ்ரீதிருமஹேந்திரப்பள்ளி தீர்த்த க்ஷேத்திரம் போற்றி
297. ஓம் ஸ்ரீகோடிக்கரை தீர்த்தம் போற்றி
298. ஓம் ஸ்ரீதெய்வத் தமிழ் எண்ணூறு பித்ரு க்ஷேத்திரங்கள் போற்றி
299. ஓம் ஸ்ரீகரசரண பூரண அட்சய வட விருட்சம் போற்றி
300. ஓம் ஸ்ரீசர்வ பித்ரு பீடங்கள் போற்றி போற்றி!!
1. ஜம்புவீத் தர்ப்பணம்
எட்டு தாமரை மொட்டுகளை சக்கர ஆரங்கள் போல் வட்டமாக அமைத்து மலர்களின் எட்டுக் கூம்புப் பகுதிகளும் ஒரு சிறு மத்திய வட்டத்தில் குமியுமாறு வைத்து இதன் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்துத் தர்ப்பண நீரை வார்க்க வேண்டும். இதற்கு ஜம்புவீத் தர்ப்பணம் அல்லது தாமரைத் திடல் தர்ப்பணம் என்று பெயர். தர்ப்பணத்திற்குப் பின் தாமரை மொட்டுக்களை விரித்து பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும்.
----
2. ஒரு வாழை இலையில் ஆவி பறக்கும் அளவிற்கு சூடான மூன்று மூன்றாக இட்லிகளை 4 வரிசையில் மொத்தம் 12 இட்லிகளை வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் பரப்பித் தர்ப்பணம் அளிக்க வேண்டும். உண்மையில் இது பித்ரு ஹோமத்திற்கு ஈடான பலனை அளிக்க வல்லது. தர்ப்பணத்திற்குப் பின் சுவையான தேங்காய் சட்னியுடன் இட்லிகளை தானமாக அளிக்க வேண்டும். பொதுவாக அனைத்து விதபூஜைகளின் பலாபலன்களும் அதனை ஒட்டி அமைகின்ற தான, தருமங்களில் தான் பரிபூரணம் அடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
3. க்ஷீர கோடி தர்ப்பணம்
க்ஷீர கோடி தர்ப்பணத்தில் ஆட்டு நெய், ஒட்டக நெய், நல்லெண்ணெய் இவை மூன்றும் சேர்ந்த முக்கூட்டு எண்ணெயால் துளசியின் வடக்கு வேர் கொண்டு திரித்த திரியால் செவலூர் திருத்தலத்தில் தீப மேற்றி அதன் பின்னரே தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கூட்டு எண்ணெய்க்கு அபரிமிதான அக்னி சக்திகள் உண்டு. இறந்தவர்கள் அனைவரும் ஒளி லோகம், மத்திம லோகம், இருண்ட லோகம் என்ற மூன்று லோகங்களில் ஏதாவது ஒன்றை அடைந்துதான் தீர வேண்டும். இந்த லோகங்களில் வாழும் நம் முன்னோர்களை அனைவராலும் தொடர்பு கொள்ள முடியாது. ஒளி உலக முன்னோர்களை அனைத்து மகான்களும், தர்ப்பண வழிபாடுகள் மூலம் அந்த ஜீவன்களின் வாரிசுகளும் தொடர்பு கொள்ளலாம். மத்திம லோக ஜீவன்களை அதற்கென பிரத்யேகமான சக்தி உடைய மகான்கள், பித்ரு தேவதைகள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இருண்ட லோக வாசிகளை எவராலும் தொடர்பு கொள்ள முடியாது. அப்படி ஒரு வேளை மந்திரங்கள், telepathy போன்ற தொலை தொடர்பு முறைகளால் தொடர்பு கொண்டால் அவர்கள் உயிருடன், சுயநினைவுடன் திரும்ப முடியாது.
இந்த இருண்ட லோக வாசிகளையும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தர்ப்பண வழிபாட்டுப் பலன்களை அளிக்கக் கூடிய அற்புத மகானே துவரங்குறிச்சியில் அருள்புரியும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகள் ஆவார். இந்த இருண்ட லோகவாசிகளையும் அடையக் கூடிய தர்ப்பண வழிபாடே செவலூர் திருத்தலத்தில் அளிக்கும் க்ஷீர கோடி தர்ப்பணம் ஆகும்.
க்ஷீர கோடித் தர்ப்பணத்தில் ரஜத சந்திர என்ற விரல் அமைப்பை உருவாக்குகிறோம். தட்சிணா மூர்த்தியின் சின் முத்திரையைப் போன்ற அமைப்பை உடையதாக இந்த குரு விரலையும் சுக்கிர விரலையும் (ஆள் காட்டி விரல், கட்டை விரல்) இணைக்கும் முத்திரை போல் இது தோன்றும். தட்சிணா மூர்த்தி உயிர்களின் அனுகிரகத்திற்காக அளிக்கும் சின்முத்திரையை சாதாரண மனிதர்கள் உபயோகிக்கக் கூடாது என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல். அவ்வாறு இருக்கும்போது எப்படி மக்கள் இந்த ரஜத சந்திர முத்திரையை உபயோகித்து தர்ப்பணம் அளிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம்.
நாம் அனைத்து நற்காரியங்களையும் வலது கையைக் கொண்டே நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், தர்ப்பணத்தில் வலது கையில் எள் மணிகளை வைத்து இடது கையால் தீர்த்தம் ஊற்றி நம் மூதாதையர்கள் என்ற உயர்ந்த குல ஜீவன்களுக்கு வழிபாடுகள் செய்கிறோம் அல்லவா ? இங்கு இடது கை, வலது கை என்ற இரண்டும் சேர்ந்த இருகை வணக்கம் போன்ற வழிபாட்டை இது உருவாக்குகிறது. இரு கை சேரும் வணக்கமே மற்றவர்களை மகிழ்விப்பது, நம் பாரத பண்பாட்டில் தழைத்தோங்குவது. இந்த கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தால்தான் ரஜத சந்திர முத்திரைக்கும், சின் முத்திரைக்கும் உள்ள ‘வித்தியாசம்’ உங்களுக்குப் புரிய வரும். (only for sheerakodi tharpanam should use this muthirai)
4. அங்கம் சிதைந்து இறந்தோர்க்கும் ஆன்மசாந்தி அளியுங்கள்!
விபத்துகளில் அங்கச் சிதைவுடனும் இறந்தோருக்கு ஆன்ம சாந்தி நிலையைத் தந்திட, உத்தராணி மரத் தாம்பாளத்தில் முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற நறுமணப் பூக்களைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் இட்டுத் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.. அமாவாசையன்று சித்த யோகத்திலோ, அமிர்த லோகத்திலோ இத்தகைய தர்ப்பணத்தை அளித்து அங்க பூஷண சக்திகள் நிறைந்த காய்கறிகளை, பண்டங்கள் கூடிய உணவு வகைகளை அன்னதானமாக அளித்தால் மேற்கொண்டோருக்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்..! அங்க பூஷண சக்திகள் நிறைந்த காய்கறிகள், திரவியங்கள் யாவை தெரியுமா? புடலங்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், மிளகு, ஜீரகம் போன்றவை ஆகும்.. கலியுகத்தில் அங்கச் சிதைவுகள் ஏற்படுகின்ற வகைகளில் எலும்பு முறிவும் ஒன்று தானே! மேற்கண்ட காய்கறிகள் யாவும் எலும்புக்கு உரிய தேவதைகளுடைய ஆகர்ஷண சக்திகளைப் பெற்றமையால் இவற்றைக் கொண்டு அன்னதானம் செய்வித்தால் அங்கங்கள் பின்னமாகி இறந்தோருக்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்..!
நீராலாகிய தர்ப்பணம் ஏனோ? விருப்பு, வெறுப்பு நிலைகளைக் கடந்தவர்களாகப் பித்ருக்கள் விளங்கினாலும், அவர்களுக்கு உரித்தான ஒளிமயமான தேகத்தில் பரிவிக்கல் என்ற நிலை ஏற்படும். எவ்வாறு நீர் தாகத்தால் மனிதனுக்கு உடலில் நீர்ச் சத்துக் குறைந்து விக்கல் ஏற்படுகின்றதோ, இதேபோல் பித்ருக்களுக்கு பரிவிக்கல் என்ற ஏக்கம் ஏற்படும். அவரவருடைய சந்ததிகள் மூலம் அளிக்கப் படுகின்றத் தர்ப்பண நீர் தேவ சத்து குறைவுறும் போது அவர்கட்குப் பரிவிக்கல் ஏற்படும்! இதனால் அவர்களால் பலவிதமான பூஜைகளை நிறைவேற்ற முடியாமற் போய்விடும்! அவரவருடைய பூலோக சந்ததிகளின் தர்ப்பணத்தில் விளையும் தேவநீரோட்டச் சக்தியால் மட்டுமே இந்தப் பரிவிக்கலைத் தீர்க்க முடியும்! இந்தப் பரிவிக்கலினால் பித்ருக்களினால் குறித்த சிவபூஜைகளை நிறைவேற்ற முடியாமற் போகும்போது அவர்களால் பலவிதமான ஆசிகளையும் அளிக்க முடியாமல் போகிறது! இவற்றையே நாம் பித்ருசாபம் என்று மறைமுகமாகச் சொல்கின்றோம்!
குறித்த ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளாக ஒழுங்காகத் தர்ப்பணம் அளிக்கப்படாவிடில் அவர்களுடைய பித்ருமார்களுக்குப் பரிவிக்கல் ஏற்பட்டுப் பெருகி இவ்வகையில் அவர்களால் ஆசியளிக்கக் கூடிய நல்வரங்களைத் தர இயலாதிட, இதுவே சந்ததி விருத்திக்கான ஆசிகளையும் தடுத்து பித்ருசாபம் என்று நடைமுறை வழக்கில் புரியும் வகையில் சொல்லும்படி ஆகி விடுகின்றது!
சீயாத்தமங்கை என்னும் சிவத்தலத்தில் உள்ள ஆலய தீர்த்தத்தின் ஒருபாதி சூர்ய தீர்த்தமாகவும் மறுபாதி சந்திர தீர்த்தமாகவும் விளங்குகின்றது! சூரிய, சந்திர கிரக சங்கமம்தானே அமாவாசை! எனவே அமாவாசைதோறும் இத்தீர்த்தத்தில் எள்கொண்டு தர்ப்பணமிட்டுப் பித்ருக்களின் பரிவிக்கலைத் தீர்க்க வல்ல பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் கலந்த உணவினைத் தானமாக அளித்து வந்தால் பித்ரு சாபங்கள் தணிந்து சந்ததி விருத்தி ஏற்படும்! நல்ல வீடும், வரனும் அமையும்! பாரம்பர்ய நோய்கள் தாக்குமோ என்ற அச்சந்தீரும்! ஆனால் தொடர்ந்து இத்தலத்தில் தர்ப்பணம் அளித்து வருதல் வேண்டும்!
சூரியனும், சந்திரனும் இணைகின்ற நாளே அமாவாசை என நாம் அறிவோம். இதுமட்டுமின்றி இறைவனின் வலது கண்ணாகிய சூரிய சக்தியும், இடது கண்ணாகிய சந்திர சக்தியும் சேர்ந்து இறைவனின் ஆக்ஞா நேத்ர சக்தி பல தீர்த்தங்களிலும், பித்ரு முக்தித் தலங்களிலும் பெருகுகின்ற நாளே அமாவாசையாம்! அமாவாசயன்று, சூரிய, சந்திர ஐக்ய மண்டலத்தில் தோன்றுகின்ற சோமபாஸ்கரச் சாயா தீர்த்தத்தில் பித்ருக்கள் நீராடித் தங்களுடைய பித்ருக்களுக்கும், சோம பாஸ்கரச் சாயாம்பரத் தீர்த்தத்தில் தர்ப்பண அர்க்யம் அளிக்கின்றனர். ஆம், பித்ருக்களுக்கும் தர்ப்பண பூஜை முறைகள் உண்டு! பித்ருக்களுக்கெல்லாம் நாயகராக விளங்குகின்ற ஸ்ரீமகாவிஷ்ணு, அமாவாசையன்று சூரிய சந்திர ஐக்ய மண்டலத்தில் எள், பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் போன்ற பித்ரு சக்திகள் கூடிய, தாவர மண்டலங்கள் நிறைந்த தேரில் பவனி வருகின்றார்.
தர்பை, எள், நீர் மூன்றும் “ஆடி” வகைத் தத்துவார்த்தமாகவும், அனுபூதிப் பூர்வமாகவும் தர்ப்பணப் பூஜையில் பயன்படுகின்றன. கலியுகத்தில் தத்துவம் என்பது வெறும் புத்தக அறிவாக, ஏட்டுச் சுரைக்காயாக மாறி விட்டது. எள்ளில் மறைபொருளாக உள்ள தைல சக்தி, எண்ணெயாக வெளி வரும் வரை, அனுபூதி சக்திகளுடன் திகழ்கிறது. இதனால்தான் விண்ணியல் ஞானவான்களான பித்ருக்களுக்கு, “எள்” மிகவும் ப்ரீதி அளிப்பதாக உள்ளது.
எனவே எள்ளுக்கு மறைபொருளை உரைபொருளாக உணர வைக்கும் தர்ப்பண சக்திகள் உண்டு. எனவே தர்ப்பணம் என்பது தத்துவத்தை, அனுபவப் பூர்வமாக அளிக்க வல்லவை! இதனால்தான் மஹா கணபதிக்கு உரிய சதுராவ்ருத்தித் தர்ப்பணப் பூஜை என்ற விசேஷமான பீஜாட்சர வகைப் பூஜை ஒன்று உண்டு. தக்க பெரியோர்களிடம் விளக்கங்களைப் பெற்றுக் கடைபிடிக்கவும்.
“கடந்த காலத்தில் வாழ்ந்தோர்க்காக, நிகழ்காலத்தார், வருங்காலத்தாரின் ஆன்ம வளத்திற்காக” அளிப்பதே தர்ப்பணமாகும். மூன்று காலத்தாரும் தர்ப்பண சக்திகளால் இணைகின்றனர். “நடந்த்தே, நடப்பனவாய் நடந்து வருகிறது” என்பதே, சித்தர்கள் காலமார்கம், பூமியின் சுழற்சி, பூமி வாழ்க்கை பற்றி அளிக்கும் “ஏக வாக்கிய” விளக்கமாகும். இதில் ஆத்ம விசாரமாகப் புகுத்திடில், “ஆடி, கோடியாகி” கோடானு கோடி விளக்கங்கள் புலனாகும். இத்தகைய ஆத்ம சக்திக்கான நல்வரங்களை அளிப்பவளும் “ஆடிப் பூர” அம்மனாய் மிகவும் அரிதாயச் சில தலங்களில் அருள்கின்றாள்!
உண்மையில் வாழ்க்கை என்பதில் மூதாதையர்கள் உத்தம நிலைகளை அடைவதும் அல்லது மீண்டும் பிறப்பெடுப்பதும் கால மார்கமாகத்தானே! உதாரணமாக, ஆத்மார்த்தமாக நீங்கள் அளிக்கும் தர்ப்பணத்தில், கீழ் நோக்கி பூமியில் விழும் தர்ப்பண நீர்த் தாரைகளில், உங்கள் முன்னோர்களின் பிம்பங்களைக் கண்டிடலாம். சத்தியப் பூர்வமான தர்ப்பண வழிபாடுகளில், பித்ருக்களே கைகளில் இருந்து அர்க்ய நீரைப் “பிடித்துச் செல்வதாகப்” பலரும் உணர்ந்துள்ளனர்.
இதனால்தான் வானியல் நிபுணர்களும், சாஸ்திரிகளும் “ஆடி” மாதத்தில்தான் அற்புதமான வானியல் தரிசனங்களை, கண்டுபிடிப்புகளைப் பெற்றனர். இதனால்தான் “ஆடித் தபசு” அம்மனாய், அம்பிகை தோன்றி, மகத்தான நல்வரங்களை ஜீவன்களுக்கு அருள்கின்றாள்.
முன்னோர்கள், மூதாதையர்கள் என்பார் யார்? பாரதக் குடும்பங்களில் பாட்டனார், முப்பாட்டனார், பெயரையே பேரனுக்கு, கொள்ளுப் பேரனுக்கு வைக்கும் வழக்கம் உண்டு. இதற்கு என்ன அர்த்தம்? உதாரணமாக, உங்களுடைய பாட்டனார், முப்பாட்டனாரின் பெயர் “கந்தசாமி” எனில், அவருடைய பெயரே மீண்டும் எவருக்கேனும் உங்கள் வம்சத்தில் வைக்கும் போது “தாத்தா மீண்டும் பிறந்திருக்கிறார்!” என உரைப்பதுண்டு.
அதாவது இதன் மூலம் உங்கள் மூதாதையரே உங்கள் குடும்பத்தில் மீண்டும் பிறந்திருக்கின்றார் என்பதாகிறது. மீண்டும் மீண்டும் இது குடும்பத்தில் நிகழும் அன்றோ! இதுவே சித்தர்களின் மஹாவாக்கியமான “நடந்த்தே நடப்பனவாய் நடந்து வருகிறது” (What Happened Happens to Happen) என்பதை நிரூபிப்பதாகும்.
உங்கள் தாத்தா, முப்பாட்டனாரின் பெயரைச் சூடியவர் அல்லது “தாத்தாவே உரித்து வந்திருக்கிறார்” என்பதன் பொருள் இப்போது நன்கு விளங்குகின்றதா? தாத்தா அல்லது முப்பாட்டனார் பெயரைக் கொண்டவர் நீங்களாகவே இருந்தால், நீங்கள் தாத்தாவிற்கோ, முப்பாட்டனாருக்கோ இப்போது அளிக்கும் தர்ப்பணம், அவரே நீங்களாக வந்து பிறந்திருப்பதால், உங்களுக்காக நீங்களே சுயத் தர்ப்பணம் அளித்துக் கொள்வதாகவும் ஆகின்றது அல்லவா! இதுவே மூன்று காலங்களையும் உள்ளடக்கும் “தர்ப்பண ஆடி” விளக்கமாகும்.
ஒரு கண்ணாடியில், பார்க்கும் பொருள், பார்க்கின்ற பொருள், பார்க்க வைக்கும் பொருள் ஆகிய மூன்று உண்டு. இவைதாம் “ஜீவநாடி, ஜீவ கோடி, ஜீவ ஆடி” ஆகிய மூன்றுமாய் ஆகின்றன. கோடி என்பதற்கு யோகப் பூர்வமாய், தியானப் பூர்வமாய், ஞானப் பூர்வமாகக் கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு.
வாழ்க்கையில் அனைத்துச் சந்திப்புகளும், காரியங்களும் இந்த மூன்றினுள் அடங்குவதாகும். “ஆடி அடங்கும் வாழ்க்கை” என்ற முதுமொழியில், இந்த “ஆடித்” தத்துவம் நன்கு விளங்குகின்றது. இதற்கெனவே அமைந்த “ஆடி” மாதம், பல ஆத்மார்த்தமான விசேஷப் பண்டிகைகள், விரதங்களுடன் பொலிவதுடன், “ஆடி மாதத்தில்” வானில் அமையும் கோள, நட்சத்திர அம்சங்கள், மகத்தான ஆத்ம சக்திகளைத் தருபவை ஆகும்.
எங்கோ அக்கிரமம் நிகழ்கிறது, நமக்கென்ன வந்தது?“ என்று மக்கள் அசட்டையாக இல்லாது, எப்போதும் இறைமந்திரங்களை ஓதியும், அவ்வப்போது இயன்ற தான, தர்மங்கள், வழிபாடுகளை ஆற்றுவதையும், பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றதின் “லட்சியமாகவும்“ கொண்டு செயல்படுதல் வேண்டும். “பயங்கரவாத சக்திகள்“ அதிகமாக உள்ள இடங்களில், “வேல் மாறல், பகை கடிதல்“ போன்ற சக்தி வாய்ந்த பீஜாட்சரப் பாக்களைச் சத்சங்கப் பூர்வமாக செவ்வாய் ஹோரை நேரத்தில் ஓதியும், தக்க ஹோம பூஜைகளையும் ஆற்றி வருதலாகிய பிறவிக் கடமைகளையும் செவ்வனே ஆற்றி வர வேண்டும்.
கலியுகத்தில் “வன்முறைத் தீய சக்திகள்“ விரைவில் பரவும் என்பதால்தான் மாமுனிகள் இத்தகைய சக்தி வாய்ந்த “வேல் சக்தி“ மந்திர சக்திகளைத் தந்தருளி உள்ளனர். தனித்திருக்கும் போதும், இரவிலும், பிரயாணத்திலும், புது இடங்களுக்குச் செல்லும் போதும் இவ்வகைக் “காப்பு சக்தி“ மந்திரங்களை இடைவிடாது ஓதி இவற்றை இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கூட எழுதித் தமிழ் அறியாதப் பிறரையும் ஓத வைத்தல் உத்தமமான தொண்டாகும். “வன்முறை தணிதல் வேண்டும், அன்னமா மறைச் சுடராலே! வேல் வேல் வெற்றி வேல்!“ என்று மிக எளிமையாக ஓதி, தினமும் பித்ரு ப்ரீதி தரும் “பிரண்டைத் துவையலுடன்“ அன்னதானம் செய்வதும், சாத்வீகமான முறையில் வன்முறைத் தீய சக்திகளை மாய்த்திட உதவும். உலகின் எங்கோ ஒரு மூலையில் இவ்வாறு ஆற்றப் பெறும் எளிய வகை அன்னதானம் கூட பலத்த பயங்கரவாதியின் மனதை, அவரவருடைய மூதாதையரின் பாங்கால் பண்படுத்த வல்லதாகும்.
இவ்வாறாக, “ஜீவனுக்கு ஜீவன் ஜீவ ஆடி!” என்பதில் தர்ப்பணப் பூஜையின் சக்திகளை விளக்குவதாகவுமான கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு. இவ்வாறு பூவுலகில் நீங்கள் காணும் ஒவ்வொரு மனிதரும் பல்லாயிரம் பிறப்புகளின் பிம்ப வடிவமே! இதனை நன்கு உணர்த்துவதும் தர்ப்பண சக்திகளின் மகிமைகளுள் ஒன்றாகும்.
பித்ருக்கள், நிலை என்பது தேவாதி தேவர்களைப் போல பசி, பிணி, நோய், நொடியற்ற உத்தம தேவநிலை என்றாலும் பித்ருக்களுக்கு உரித்தான மேலும் பல மோட்ச, முக்தி நிலைகளும் உண்டு. பூலோகத்தில் சந்த்தியினர் செய்கின்ற தானதர்மங்கள், தர்ப்பண வழிபாடுகளின் ஒரு பங்குதான் பித்ருக்களுடைய மோட்ச நிலைக்கும், முக்தி நிலைக்கும் பெரிதும் உதவுகின்றது.
அதாவது இறந்தவருடைய பெயரைச் சொல்லி உதாரணமாக கோவிந்தசாமி என்பது ஒருவருடைய பாட்டனார் பெயர் என்றால்,“கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி, கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி, கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்றோ அல்லது பைந்தமிழில்“மண்ணிடை அருட் பெயர் கொண்ட மாதவ ...... (கோவிந்தசாமி) நாமத்தார் விண்ணிடைத் திருக்குரல் கொண்டு விமலராய் வினை தீர்ப்பீர்!” என்று மூன்று முறை உள்ளங்கையில் நீரை எடுத்து வலது ஆள்காட்டி விரலுக்கும், வலது கட்டைவிரலுக்கும் இடையே நீரைத் தாரையாக பூமியில் வார்த்து தர்ப்பணமாக அளித்தால் இந்நீரே தர்ப்பண சக்தி நிறைந்த தீர்த்தமாக மாறி பித்ருலோகத்தை அடைந்து பாட்டனாருடைய ஜீவ ஆத்மத்தின் நன்னிலைக்குப் பெரிதும் உதவுகின்றது. இதுவே பித்ருக்கள் மேலும் தேவ சக்திகளைப் பெற உதவுகின்றது.
ஏன், ஒரு பித்ரு ஆனவர் ஆயிரம் கோடி ஜீவன்களுக்குரித்தான புண்ய சக்தி அளிப்பவர் என்றால் தம்முடைய பித்ரு லோகத்தின் நீர்வளத்தை அவரால் பெருக்க இயலதா என்று கேட்டிடலாம். நீர்ச் சத்து என்று நாம் இங்கு குறிப்பிடுவது நீர் நிறைந்திருப்பது மட்டுமல்ல, தர்ப்பண அர்க்யம் என்று சொல்லப்படுகின்ற தர்ப்பணத்தில் வார்க்கப்படுகின்ற நீருக்குக் கோடானுகோடி லோகங்களையும் கடந்து செல்கின்ற ஜலஜோதி சக்தி உண்டு. இவ்வாறு நாம் ஊற்றுகின்ற நீரானது அர்க்யமாக கீழே பூமியில் பட்டு பித்ருசக்தி, பூமியின் ஆகர்ஷண சக்தியை ஈர்த்து மேலே புறப்பட்டு கோடானுகோடி லோகங்களைக் கடந்து சென்று ஜலதீப சக்தியாக மாறுவதையே நாம் இங்கு பித்ரு லோக நீர் சத்து என்று கூறுகின்றோம்.
பூலோகத்தின் தர்ப்பண அர்க்கயத்திலிருந்து எழும் இந்த தீபச் சக்தியானது விண்ணின் பலகோடி அண்டங்களையும் கடந்து பித்ரு லோகத்திலுள்ள நீருடன் கலக்கும். பித்ரு வழிபாட்டில் தர்ப்பணமாக அளிக்கப்படுகின்ற நீர்த் தாரைக்கு மட்டும்தான் இத்தகைய ஜலதீப சக்தி என்ற அற்புதமான சக்தி உண்டு. இதனையே நீர்ச்சத்து என்று நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். இதற்கு ஜலபரமசக்தி என்று பெயரும் உண்டு. எனவே நாம் நம் பித்ருக்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பண வழிபாடுகளிலிருந்து தவறுகின்ற போது, அதுவே நமக்கு பித்ரு சாபமாக திரு(ம்)ப்பி வருகின்றே தவிர, பித்ருக்கள் நமக்கு ஒருபோதும் எவ்வித சாபத்தையும் அளிப்பது கிடையாது. நாம் நன்கு புரிந்து கொள்வதற்காக இதனைப் பித்ரு சாபம் என்று சொல்கின்றோம் அவ்வளவே!
பித்ருக்களுடைய தேவ சக்தியை நம்மால் அளவிட முடியாது. உதாரணமாக வசு பித்ரு தேவ நிலையில் இருப்பவர் 1000 கோடி ஜீவன்களுக்கு உரித்தான புண்ய சக்தியை ஒரு வினாடியில் அளிக்க இயலும், என்றால் இதற்கு அடுத்த நிலையில் உள்ள ருத்ர பித்ரு மூர்த்தியானவர் பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கு உரித்தான புண்ய சக்தியை அளிக்க வல்லவராவர். அதற்கு மேலான ஆதித்ய பித்ரு மூர்த்தியானவர் பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்குரித்தான ஆத்ம புண்யசக்தியை அளிக்க வல்லவராவர்.
எனவே உத்தம பித்ரு நிலைகளிலும் இவ்வாறாக எத்தனையோ வகைகள் உண்டு என்பதை உணர்வீர்களாக. ஒவ்வொரு அமாவாசை தோறுமாவது நாம் நம் மூதாதையர்களுக்குரித்தான வழிபாடாக தர்ப்பண அர்க்யத்தை அளிக்காமல் இருப்பதால்தான் பித்ருலோகத்தில் நீரின் தேவ சக்தி குறைந்து விடுகின்றது. ஏனென்றால் தேவ நீர்ச் சக்தி நிறைந்திருப்பதுதான் பித்ரு லோகமாகும். பூலோகத்தில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் நீர்ப் பஞ்சம் ஏற்பட்டால் அரசும், அலுவலகர்களும், பொது மக்களும் அதற்கு எவ்வளவு பொறுப்பு ஏற்க வேண்டுமோ அதே போலத்தான் பித்ரு லோகத்தில் நீர்ச் சக்தி குறைவதற்கான பொறுப்பை அவர்களுடைய சந்ததியினர்கள் பூமியில் நிச்சயமாக ஏற்றாக வேண்டும்.
We use cookies to analyze website traffic and optimize your website experience.