ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
எடுத்த சீவனைக் காக்கும் புலத்தால், தொடுக்கும் பிறவி ஏதில்லா தாக்கல் விடுத்த சித்த(ர்)குலச் சாதனமன்றியே பிராண உபாயம் (உபயம்) வேறொன்றில்லையே..!
குருகிட்டேந்து வர்ற ஆன்மீக பொக்கிஷத்தை தனக்குள்ளேயே வச்சுக்காம ஒவ்வொரு சீடரும் கொறஞ்சது ஒரு பத்தாயிரம் பேருக்காவது சொல்லிப் பரப்பி வரணும்! – சித்த மஹா சத்குரு ஸ்ரீஇடியாப்ப சித்தர்!
Om Asper Vathiyar Gurus ParamAthma quote's posting Contents! as a fan follower to beloved Vathiyar!
*300கோடி இரகசிய நாட்டிய அம்சங்கள் கொண்ட விஜய தாண்டவத்தின் ஒரே ஒரு நடன இரகசியத்தைப் பற்றி இங்கு விளக்குகிறோம்..!
**உதாரணமாக வெள்ளிக்கிழமை அனுஷம் நட்சத்திரம், வளர்பிறை துவாதசி திதி, ரிஷப லக்னம், சுக்ர ஹோரை போன்ற நிதிவள அம்சங்கள் ஒன்றாய் இணைந்து அமையும் முகூர்த்த நேரம் மிகவும் அரிது!
***இத்தகைய அரிய முகூர்த்த நேரத்தை ஸ்தம்பனம் செய்து அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் ஆற்றலை ஒருவர் பெற்றிருந்தால் அதற்கு என்ன விலை மதிப்பு!
*ஸ்ரீஅகத்தியரின் வழித் தோன்றலான சற்குரு ஸ்ரீவெங்கடராமன் இத்தகைய முகூர்த்த ஸ்தம்பன அருட்சக்திகளை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழின் மூலம் அளித்து வருகிறார்கள் என்பது எவரும் அறியா சித்த ரகசியம்!
**எனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் ஒன்றிற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் அது அதனுடைய உண்மையான மதிப்பு ஆகாது என்பது இப்போது புலனாகின்றது அல்லவா?
ஒரு ரோஜா செடியிலிருந்து ஒரு ரோஜா மலர் தரையில் விழுவதாக வைத்துக் கொண்டால் அந்த மலர் எத்தனை நாட்கள் செடியில் இருக்க வேண்டும், எந்த நேரத்தில் செடியிலிருந்து பிரிந்து தரையில் விழ வேண்டும், அவ்வாறு கீழே விழும்போது அந்த ரோஜா மலர் எத்தனை இதழ்களாகப் பிரிய வேண்டும், பிரிந்த இதழ்களில் ஒவ்வொன்றும் எங்கே, செடியிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி விழ வேண்டும், அவ்வாறு விழும் இதழ்களில் எத்தனை இதழ்கள் அங்கேயே கிடக்க வேண்டும், எத்தனை இதழ்கள் மனிதர்கள் காலால், விலங்கினங்களால் மிதிபட வேண்டும், எத்தனை இதழ்கள் வாயு பகவானால் மீண்டும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றெல்லாம் கணக்கை நிர்ணயிப்பவர்கள் சித்தர்கள், மகான்களே.
பஞ்ச பூதங்களும் நாம் நினைப்பது போல் சுதந்தரமாகச் செயல்படுவதில்லை. பஞ்சபூத தேவதைகளும் சித்தர்களின் ஆளுகைக்கு உட்பட்டவையே. இதைத்தான் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று நம் முன்னோர்கள் சாதாரணமாகக் குறிப்பிட்டார்கள்.
1996ம் ஆண்டு ஸ்ரீவாத்யார் அவர்கள் ஆத்ம வல வழிபாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அன்றைய தேதியில் அவர்கள் 1,75,000 அடியார்களின் ஆத்ம ஜோதியை தன்னுடைய ஆத்ம ஜோதியுடன் இணைத்து தினமும் வலம் வரும் இரகசியத்தை வெளியிட்டார்கள்.
இந்த வழிபாட்டை நிறைவேற்ற ஸ்ரீவாத்யார் அவர்களுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் எடுத்துக் கொள்ளுமாம். பூலோக காலக் கணக்கில் தினமும் இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கும் வழிபாடு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பூரணம் அடையும்.
ஒவ்வொருவரின் ஜோதியாக தன்னுடன் இணைப்பதற்கு மூன்று மணி நேரமும் அவ்வாறு இணைந்த ஜோதிகளை வலம் வருவதற்கு ஆறு மணி நேரமும் தினமும் தேவைப்படும் என்று தெரிவித்தார் சுவாமிகள்.
மேலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20,000 புதிய அடியார்களின் ஆத்ம ஜோதியைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதாகவும் அடியார்களிடம் கூறினார்கள். அப்படியானால் இன்றைய கணக்கில் ஸ்ரீவாத்யாருடன் இணைந்த அடியார்களின் ஜோதி எத்தனை என்பதை எம்பெருமான் அருணாசல ஈசன் மட்டுமே அறிவார்.
“ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் பேரை மாய்ப்பது பிரமாதமில்லை, ஒரு குண்டு போட்டு லட்சம் நெல் மூட்டைகளை விழ வைத்தால் அதுவே சாதனை...,” என்பார் கோவணாண்டி. இது ஏதோ ஒரு உயர்ந்த மனத்தில் தோன்றிய ஒரு நல்ல எண்ணம் என்று நாம் நினைக்கலாம். பொழுதுபோக்கிற்காக, விளையாட்டிற்காக தங்கள் வார்த்தைகளையோ, நேரத்தையோ செலவழிப்பவர்கள் அல்ல மகான்கள். எப்போது ஒரு குண்டு போட்டு லட்சம் நெல் மூட்டைகளை விழ வைப்பதே சாதனை என்று கோவணாண்டி கூறி விட்டாரோ அப்போதே அதை நிறைவேற்றுவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை தன் ஆருயிர் சீடன் செய்து விடுவான் என்று தெரியும் நம் கோவணாண்டிக்கு.
இத்தகைய அரும்பெருஞ் சாதனைகளை எல்லாம் தான் திருஅண்ணாமலையில் அன்னதானம் நிகழ்த்தியபோதெல்லாம் எவரும் அறியா வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்களின் அரும்பசியை இத்தகைய ‘நெல் மூட்டைகளில்’ விளைந்த அன்னப் பிரசாதம் மூலம் போக்கினார் நம் சற்குரு என்பதை ஒரு சில அடியார்களே அறிவர்.
இவ்வாறு லட்சக் கணக்கான உயிரினங்களை மாய்க்கும் பிரம்மாஸ்திரத்தின் சக்தியையும் தன்னிலைப்படுத்தி அதை மக்களின் நல்வாழ்விற்காக அளிக்கும் சக்தி கொண்ட நம் சற்குருவின் தியாகச் செயலுக்கு இணையான ஒன்றை இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கேள்விப்பட்டதுதான் உண்டா?
சித்தவேத யோகிகளான சித்தர்களை என்னவென்று தான் சொல்வது? ஏனென்றால் "சொன்னதை வேதமாக்கும் பன்னக வித்தர்களாயிற்றே!"
நமது சற்குரு அவர்கள் ஒரு நொடிக்கு சுமார் 50000 காரியங்களை நிறைவேற்ற வல்லவர். திருஅண்ணமாலை கார்த்திதை தீபம் போன்ற சமயங்களில் இந்த எண்ணிக்கையானது சுமார் ஒரு லட்சத்தை எட்டும் என்பார். சற்குரு அவர்கள் தினமும் தன்னைச் சேர்ந்த சுமார் 150000 அடியார்கள் நன்னிலை பெற பிரார்த்தனை செய்வதாக கூறினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் சுமார் மூன்று மணி நேரம். சற்குருவின் காரியம் இயற்றும் காலத்தைக் கணக்கிட்டால் இத்தனை பேருக்கு பிரார்த்தனை செய்ய மூன்று விநாடி நேரம்தானே ஆகும். சற்குரு தன்னுடைய பிரார்த்தனைக்கு மூன்று மணி நேரமாகும் என்றால் ஒவ்வொரு அடியாரைச் சேர்ந்த சந்ததிகள் சுமார் 3000 பேருக்கும் சற்குருவின் பிரார்த்தனை போய்ச் சேருவதாகத்தானே அர்த்தம்.
தெய்வீக ரகசியங்கள் பூத்துக் குலுங்கும் நித்திய குருசரண சுபவாக்கியத் துதியின் தொகுப்புச் சாரங்கள்!
பிரபஞ்சப் படைப்பிற்கு முன்னும், பின்னுமாயும், சிருஷ்டி, மஹாபிரளய காலத்திலும், இதற்கும் அப்பாலும், எப்பாலுமாய், எப்போதுமாய் உய்ந்துறையும் நிர்விகல்ப யோகசித்சத்புவன சதுர்புவலோகப் பவித்ரரும், வேதகாலம், சத்ய யுகந்தொட்டு சிவபுஷணத் திருமேற்றளிகளை, சிவபுவனங்களை திருக்கயிலாயத்திற்காய் பரமேஸ்வரக் கட்டளையாய்ச் சமைக்கின்ற சிவபவத் திருப்பணிகளை ஆற்றும் ‘குருமங்கள பரமேஸ்வரம்’ எனும் சீரிய அகத்தியச் சித்தர்குல தீபிகா லோகத்தின் அயமாத்மா நித்ய சித்தரும், கலியில் நற்கதியறியாது தத்தம் கர்ம வினைகளால் அல்லல்பட்டு வாழும் ஜீவன்களுக்கு சித்தர்களின் அறவழிகளை குருவருள் பிரசாதமாய் அருளிச் செய்யும் பசுமால்பத கைவல்யராய் அகத்திய கிரந்தங்களால் போற்றப் பெறுபவரும், ஜீவரட்சக வான்யோக சஞ்சாரப் பரிபாலனத் துறையை – சிவம், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் உள்ளிட்ட சகல தெய்வங்களின் கிருபையோடு, பஞ்சமாதேவியர், வேதமாதாக்களின் சாக்த கடாட்சத்தால் உகந்தேற்கும் சித்புவனத்தவரும், ராமநாம தாரக மந்திரம் போல், சர்வ தெய்வங்களின் திருநாமங்களும், ஜீவன்களுக்கு அருந்துணையாகி ரட்சித்துக் காக்கின்ற திருவருளை உணர்விக்கும் – ‘குருமங்கள பரமேஸ்வரம், தாரக குருபவனம்’ – போன்ற சூக்கும பூலோக, விண்ணுலக குருபவனங்களைப் பேணி, குருவருளை நல்கும் சித்தர்குல திவ்யப்ரகாசியுமான, சாக்த பரப்பிரம்ம சித்தலோக அரிஅரகடாக்ஷபதி சத்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் 51வது ஜீவாலயம் திருஅண்ணாமலையில் சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தின் முன் அவர்தம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் சபையில் அமைந்துள்ளது.
மெத்தமேல (அருள் லோகத்துல), அங்கேயும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் வருதுயா! அங்கப் படிக்கறதுக்குத் தேவாதி தேவர்களெல்லாம் காத்திட்டுடிருக்கான்யா! நம்ம இந்த கலியுகத்துலதான் மனுஷனுக்கு இதனோட அருமை பெருமைல்லாம் பெருசா தெரில, ஆனா மெத்தமேல தேவாதி தேவர்களெல்லாம் எப்போ இந்த புஸ்தகம் வரும்னு காத்திட்டிருக்கான்யா!
நாங்க சொல்ற இந்த மாதிரி அபூர்வமான விஷயங்களை ரொம்ப ரொம்ப அமைதியா இருந்து கேட்டு வர்றது நல்லது. ஏன்னா சத்குருவோட வாக்கியங்கள்ல ஆழ்ந்த நம்பிக்கை வர்றது அவ்வளவு சுலபம் இல்லப்பா....
இப்ப இதெல்லாம் நம்பற மாதிரி இருக்காதுதான்., ஆனா மேல வந்ததுக்கப்புறம், அங்க இருக்கற விரஜா நதில முழுகி ஏந்திரிக்கும் போதுதான், எல்லாமே உண்மைன்னு தெரிய வரும்.,ஆனா அங்க அப்ப இதைத் தெரிஞ்சுக் கிட்டு என்ன பிரயோஜனம்?’
“ஏன்னா அங்க அப்ப “இதைத்தான் உனக்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடியே பூலோகத்துலயே ஒரு ஆன்மீக வழிகாட்டி சொல்லிட்டாரேன்னு” மேலுலகத்துல ஒத்தரு சொல்லிச் சொல்லி உங்க தலையில குட்டுவாரு, ஆனா, அப்ப நாங்க பக்கத்துல இருக்க மாட்டோமே, என்ன பண்றது? அதனால, நாங்க இந்த பூமியில சொல்றது புரியுதோ, புரியலையோ, நம்பறீங்களோ, நம்பலையோ.. உலகம் ஏத்துக்குதோ, ஏத்துக்கலையோ... மொதல்ல மேலேந்து.. உத்தமப் பெரியவங்கச் சொல்றாங்கன்னு நம்பி எதையும் அமைதியா கேட்டுக்கறதுதான் நல்லது.
ஹோமம் என்ற ஒரு திருப் பணியை எடுத்துக் கொள்வோம். எமது ஆஸ்ரமத்தில் ஒரு ஹோம குண்டத்தை நிர்மாணிக்கும்போது நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள் ஒரு சில அட்சரங்களை மணல் பீடத்தில் எழுதி அதன் மேல் செங்கற்களை அடுக்கி ஹோம குண்டங்கள் கட்டுவார்கள். அதில் எழுதப்படும் மந்திர அட்சரங்கள் அனைத்தும் சித்தி செய்யப்பட்டவையே. ஒரு மந்திரத்தை ஒரு சாதாரண மனிதன் சித்தி செய்ய வேண்டும் என்றால் அதை ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். இவ்வாறு இடைவிடாமல் 18 ஆண்டுகள் தொடர்ந்து ஜெபித்து வந்தால்தான் அந்த மந்திரம் சித்தியாகும். அவ்வாறு சித்தி செய்த மந்திரத்தை ஒரு முறை ஒரு ஹோம குண்டத்தில் சங்கல்பம் செய்து அளித்து விட்டால் (பிரயோகம் செய்து விட்டால்) உடனே அதன் சக்தி பரவெளியில் கலந்து விடும். மீண்டும் அதை யாரும் தனி மனித நலனுக்காகப் பயன்படுத்த முடியாது. ஆனால், திரு அகஸ்திய குருகுலத்திலோ இத்தகைய ஹோமங்கள் ஆயிரக் கணக்கில் நிகழ்ந்துள்ளன. அப்படியானால் இந்த ஹோமங்களுக்கெல்லாம் ஆதாரமான அடிப்படை மந்திர சித்தி சக்திகளை என்னவென்று எடுத்துரைப்பது?
சற்குரு வெங்கடராமன் அவர்கள் ஒவ்வொரு கார்த்திகை தீப அன்னதானத்தின்போதும் அன்னதானத்திற்கு அரிசியை அளந்து அன்னக்கூடையில் போடும்போது, “கபாலி, கற்பகாம்பாள் ...“ என்று சொல்லித்தான் அரிசியை அளந்து போடுவார்கள். அப்படி ஒரு முறை கூறும் கற்பகாம்பாள் என்ற நாம ஒலியே அன்று அன்னதானத்திற்குப் பயன்படுத்தும் அனைத்து அரிசி மணிகளுக்கும் அவைகள் விதைக்கப்பட்டதிலிருந்து, அரிசியாக மாறி, பிரசாதமாகி ஒரு அடியார் கைக்கு செல்லும் வரை தேவையான காயத்ரி மந்திர சக்திகளை நிரவி விடும். இதுவே சித்தர்களின் நாம ஜப மகிமை.
ஹோமம் என்ற ஒரு திருப் பணியை எடுத்துக் கொள்வோம். எமது ஆஸ்ரமத்தில் ஒரு ஹோம குண்டத்தை நிர்மாணிக்கும்போது நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள் ஒரு சில அட்சரங்களை மணல் பீடத்தில் எழுதி அதன் மேல் செங்கற்களை அடுக்கி ஹோம குண்டங்கள் கட்டுவார்கள். அதில் எழுதப்படும் மந்திர அட்சரங்கள் அனைத்தும் சித்தி செய்யப்பட்டவையே. ஒரு மந்திரத்தை ஒரு சாதாரண மனிதன் சித்தி செய்ய வேண்டும் என்றால் அதை ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். இவ்வாறு இடைவிடாமல் 18 ஆண்டுகள் தொடர்ந்து ஜெபித்து வந்தால்தான் அந்த மந்திரம் சித்தியாகும். அவ்வாறு சித்தி செய்த மந்திரத்தை ஒரு முறை ஒரு ஹோம குண்டத்தில் சங்கல்பம் செய்து அளித்து விட்டால் (பிரயோகம் செய்து விட்டால்) உடனே அதன் சக்தி பரவெளியில் கலந்து விடும். மீண்டும் அதை யாரும் தனி மனித நலனுக்காகப் பயன்படுத்த முடியாது. ஆனால், திரு அகஸ்திய குருகுலத்திலோ இத்தகைய ஹோமங்கள் ஆயிரக் கணக்கில் நிகழ்ந்துள்ளன. அப்படியானால் இந்த ஹோமங்களுக்கெல்லாம் ஆதாரமான அடிப்படை மந்திர சித்தி சக்திகளை என்னவென்று எடுத்துரைப்பது?
சற்குரு வெங்கடராமன் அவர்கள் ஒவ்வொரு கார்த்திகை தீப அன்னதானத்தின்போதும் அன்னதானத்திற்கு அரிசியை அளந்து அன்னக்கூடையில் போடும்போது, “கபாலி, கற்பகாம்பாள் ...“ என்று சொல்லித்தான் அரிசியை அளந்து போடுவார்கள். அப்படி ஒரு முறை கூறும் கற்பகாம்பாள் என்ற நாம ஒலியே அன்று அன்னதானத்திற்குப் பயன்படுத்தும் அனைத்து அரிசி மணிகளுக்கும் அவைகள் விதைக்கப்பட்டதிலிருந்து, அரிசியாக மாறி, பிரசாதமாகி ஒரு அடியார் கைக்கு செல்லும் வரை தேவையான காயத்ரி மந்திர சக்திகளை நிரவி விடும். இதுவே சித்தர்களின் நாம ஜப மகிமை.
நம் சற்குரு பூமியில் 51 பிறவிகள் எடுத்துள்ளார். இவ்வாறு 51 மனிதப் பிறவிகள் எடுத்து பூமியில் மனிதனாக வாழ்ந்த காலம், அவை ராமானுஜரைப் போல் பூரண மனித ஆயுளுடன் திகழ்ந்தாலும், 6120 வருடங்களுக்கு மிகைப்படாது. திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனத்தின் எதிரே அமைந்துள்ள ஜீவ சமாதியே நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதியாகும். தஞ்சாவூர் பகுதியை ஆண்ட மன்னன் மாறன்பெருந்துறையான், ராஜராஜ சோழன் தாயாரின் மெய்க்காப்பாளனாக அமைந்த பிறவி, கேப்டன் கந்தர்வாவாக இந்திய இராணுவத்தில் பணியாற்றிய காலம் இவை அனைத்தின் இறுதியிலும் ஒவ்வொரு ஜீவ சமாதி உருவாகி பூமியை நிறைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலாபுரந்தர வாசுமாமுனி, பட்டாம்பூச்சி சிறகடி சித்தர், கஜதூளி பாத சித்தர் போன்ற எண்ணற்ற அரிய சித்தர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. காரணம் என்ன? இவை அனைத்தும் நம் சற்குரு முந்தைய பிறவிகளில் பூமியில் எடுத்த அவதாரங்களே !
நம் சற்குருவைப் போன்ற சித்தர், சித்தராகத் தோன்றி இருந்தாலும், அல்லது 63 நாயன்மார்களைப் போல் மனிதனாகத் தோன்றி இறை தரிசனம் பெறுமளவிற்கு உயர்ந்திருந்தாலும் அவர்கள் ஆயுட்காலம் கோடானு கோடி ஆண்டுகளுக்கு பரவி விரிந்திருக்கும் என்பது திண்ணம். அப்படியானால் இந்த கோடிக் கணக்கான ஆண்டுகளில் நம் சற்குரு எடுத்த சித்த பிறவிகள், மகானாய்த் தோன்றி அருள் பொழிந்த காலம், யோகியாய்த் துலங்கி கர்மத்தைக் களைந்த ஆண்டுகள் எத்தனை எத்தனை என்று எப்படிக் கூற இயலும்?
சற்குரு வேங்கடராம சுவாமிகளும் தாம் ஜனகர் போல் மன்னராகவும் (ராஜரிஷிக் கோலம்), ராஜகுருவாகவும் (வசிஷ்டர் போல்) பல வடிவங்களிலே முன்னர் பூவுலகிற்கு வந்து தொண்டாற்றிய வைபவங்களைக் குறிப்பிடுவார். இவ்வகையில் சற்குரு வேங்கடராம சுவாமிகள் தமக்குத் திருஅண்ணாமலை, கேரள மாநிலம், இமயமலை, திருப்பதி, சின்னபாபு சமுத்திரம் போன்ற தலங்களில் பூர்வத்தில் தமக்கு அமைந்த ஜீவசமாதியையும் காட்டி உள்ளார்.
– ஸ்ரீஅகஸ்திய விஜயம்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி நம் ஆஸ்ரமத்திற்கு சேவைக்காக வந்திருந்தார். அவரிடம் நம் சற்குரு, “சார், பொதுவாக அடியேனின் சீடர்கள் எவரும் திரும்ப பிறவி எடுப்பதில்லை (அதாவது முக்தி அடைந்து விடுவார்கள்!). நீங்கள் மட்டும் இதற்கு விதி விலக்கு. உங்களுடைய மறுபிறவியில் உங்களுக்கு ஆறு வயது நடக்கும்போது அடியேன் உங்களை ஆட்கொள்வேன்,” என்றார்.
இதிலிருந்து நாம் அறியும் விளக்கம் என்ன? நம் சற்குருவின் அடியார்களுக்கு மறுபிறவி கிடையாது, அவர்கள் இப்பிறவி நிறைவில் முக்தி அடைந்து விடுவார்கள்.
ஒரு அடியாரின் பிறவியில் பல இரகசிய முடிச்சுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் உரிய காலத்தில் உரிய முறையில் சரி செய்யும் சக்தி நம் சற்குருவிற்கு உண்டு.
நம் சற்குரு மீண்டும் பிறப்பெடுத்து இப்பூமியில் உலவுவதைக் கண்ணால் காணும் பாக்கியம் பெறும் அளவிற்கு அடியார்கள் உயர்ந்த நிலையை அடைய முடியாது என்றாலும் தன்னை நம்பும் உண்மையான சீடர்களை இனங் கண்டு கொண்டு அவர்களுக்கு முக்திப் பரிசை குரு பிரசாதமாக அளிக்க நம் சற்குரு காத்திருக்கையில் நமக்கு ஏன் வீண் கவலை?
ஒரு முறை சூரியனே ஒரு வார காலத்திற்கு இயங்க முடியாத நிலை ஏற்பட்ட போது அந்த ‘இருண்ட’ காலத்திலும் தம்முடைய தபோ பலனால் உலகம் அனைத்திற்கும் ‘ஒளி’ வழங்கி அருள்சுரந்து காத்தவரே மன இருள் அடராது காக்கும் நம் சற்குரு.
ஒரு முறை குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தான் ஒரு நிமிடத்தில் சுமார் 72 லட்சும் இறைப் பணிகள் இயற்றுவதாக குறிப்பிட்டார்கள். மனித மூளைக்கு எட்டாத இந்த எண்ணிக்கையைப் பற்றி சுவாமிகளிடம் கேட்டபோது, "எண்ணிக்கை பிரமாதம் அல்ல. நாங்கள் இயற்றும் பணியை உங்களுக்கு விவரிக்க முடியாது என்பதே எங்களுடைய சிரமம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கலசப் பகுதி சுமார் 100 அடி நீளம் உடையது, இந்த அளவின் பொற்விகிதமாக அமைந்ததே இதன் அடிப்பகுதியாகும். இந்த அடிப்பகுதியில் பாதியைக் கூட்ட கிடைப்பதே ராஜகோபுரத்தின் உயரமாகும். இந்த அமைப்பு முறையே நம் ஆஸ்ரம பித்ரு படிக்கட்டுகள் அமைப்பிலும் பதிந்துள்ளது என்பதே நம் சற்குரு தெளிவிக்கும் இரகசியமாகும். இந்த படிக்கட்டுகளை அமைத்ததே ஒரு பெரிய விந்தை என்றால் இந்த விந்தையை, வித்தையை பிரபஞ்ச பக்தர்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தும் முறையை அள்ளித் தந்த நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ? இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவாளியாக ஐன்ஸ்டீன் விஞ்ஞானி புகழப்படுகிறார். மனித சமுதாயம் தோன்றிய முதலே எழுந்தருளிய மிகப் பெரிய அறிவாளியே நம் சற்குரு என்ற பேருண்மை நம் சற்குரு இந்த ராஜகோபுர இரகசியங்களை திருஅண்ணாமலை அன்னதானத்திற்காக பயன்படுத்திய விதமே இதற்குச் சான்றாக அமைகின்றது.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் அமைந்த முப்பாதி அளவு 80 அடி அல்லவா ? இந்த முப்பாதியின் பெருக்கமாக எட்டு கோடி பேருக்கு முப்பாதி படிக்கட்டுகளில் அன்னதானம் இயற்றி அந்த பலன்களை சமுதாய மக்களுக்கு எல்லாம் அர்ப்பணித்தார். இந்த எட்டுக் கோடி என்ற எண்ணிக்கை நிறைவடைந்த போதுதான் பித்ரு படிக்கட்டுகளில் நிறைவேறிய அன்னதான கைங்கர்யம் ஆஸ்ரமத்தின் மற்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டது என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய அன்னதான இரகசியமாகும்.
மனித வாழ்வில் உயிரும் உடலுமாக இணைந்திருப்பவையே இந்த முப்பாதி இரகசியங்கள். ஒன்பது என்ற எண் முழுமையை, எல்லையை குறிப்பதால் இந்த முப்பாதி இரகசியங்களை ஆத்மவிசாரம் செய்தே ஒருவர் எல்லையற்ற இறைவனுடன் ஒன்ற முடியும் என்றால் அது மிகையில்லை. இதை அடிப்படையாக வைத்தே நம் முன்னோர்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று (15=1+5=6) என்றார்கள்.
அபய மண்டபம் வரை நீண்டு நிற்கும் அன்னதான அடியார்கள் வரிசை ஆஸ்ரமத்தை நோக்கி நகர்ந்து வரும். நம் ஆஸ்ரம பித்ரு படிக்கட்டுகள் மேல் நடுநாயகமாக பிரிஞ்சி அண்டா சூடான பிரியாணி பிரசாதத்துடன் நிறைந்திருக்கும். வரிசையில் வரும் அடியார்கள் பித்ரு படிக்கட்டுகளில் ஏறி பிரசாதத்தை பெற்றுக் கொள்வர். அவ்வாறு அன்னதானம் பெறும் அடியார் வேறு வழியில் சென்று விடாது இருக்க அருகிலேயே ஒரு அடியார் அவரை சற்றும் தாமதிக்காது மறு முனைக்கு சென்று இறங்கி விடுமாறு பணிப்பார். அன்னதானம் வாங்கும் அடியார்களோ, “ஏன், இவ்வளவு சுவையான அன்னதான பிரசாதம் அளிக்கும் இவர்கள் நம்மை இந்த விரட்டு விரடுகிறார்கள் ...”, என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த அடியார் பிரசாதம் வாங்கிய பின்னர் பித்ரு படிக்கட்டுகளின் மறுமுனைக்குச் சென்று இறங்கினால்தான் “golden triangle” என்ற அளவுகள் அப்போது முழுமை பெறும். இவ்வாறு அமைந்த தங்க முக்கோணத்தை பித்ருக்களின் நாயகரான ஸ்ரீரெங்கநாதரும் திருஉண்ணாமலை சமேத திருஅண்ணாமலையானும் ஆசீர்வதிக்கிறார்கள். இவ்வாறு தங்க விகிதத்திற்குள் தங்க முக்கோணமாக, அபராஞ்சித தங்கமாக அமையும் இந்த பிரசாதத்தின் மகிமையை மனித வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? இந்த பிரசாதத்தில் கிட்டும் ஒரே ஒரு சோற்றுப் பருக்கையால் இந்த உலகையே விலைக்கு வாங்கி விடலாம் என்றால் இவ்வாறு அண்டா அண்டாவாக பிரசாதம் அளித்த சற்குருவைப் பெற்ற அடியார்கள் கனவினும் கலங்கலாமா ?
We use cookies to analyze website traffic and optimize your website experience.