ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

  • Om
  • Amudham
  • Anandham
  • Angali
  • Athma Vicharam
  • Articles
  • Arutpakkal
  • Anudhinam
  • Audio
  • Annamalai
  • Ancestors
  • Arunachala Satguru
  • Annadhanam
  • Aalaya Arputhangal
  • Anuboothi
  • Agni
  • Anmeega Alaikal
  • More
    • Om
    • Amudham
    • Anandham
    • Angali
    • Athma Vicharam
    • Articles
    • Arutpakkal
    • Anudhinam
    • Audio
    • Annamalai
    • Ancestors
    • Arunachala Satguru
    • Annadhanam
    • Aalaya Arputhangal
    • Anuboothi
    • Agni
    • Anmeega Alaikal
  • Om
  • Amudham
  • Anandham
  • Angali
  • Athma Vicharam
  • Articles
  • Arutpakkal
  • Anudhinam
  • Audio
  • Annamalai
  • Ancestors
  • Arunachala Satguru
  • Annadhanam
  • Aalaya Arputhangal
  • Anuboothi
  • Agni
  • Anmeega Alaikal
அகத்தியத் தோற்றப் பாசுரம்!

ஆதி மூல ஸ்ரீஅகஸ்தியர் மூல ஸ்துதி!

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்மகனே அகத்தியா வா!


"*you are only repeating the words of the Mother Asha Suvasini Devi and Lord Shiva, who referred to Maha Guru Agasthiar as Their son!"

பித்ருக்கள் மகாத்மியம்!

ஶ்ரீஅக்னிசிக்‌ஷா ஶ்ரீஅகஸ்திய விஜயம் குழலுறவு தியாகி குறிப்புகள் - 250/250 - தொகுப்பு -1

Show More

ஶ்ரீஅக்னிசிக்‌ஷா ஶ்ரீஅகஸ்திய விஜயம் குழலுறவு தியாகி குறிப்புகள் -250/250 - தொகுப்பு - 2

Show More

ஶ்ரீஅக்னிசிக்‌ஷா ஶ்ரீஅகஸ்திய விஜயம் குழலுறவு தியாகி குறிப்புகள் -250/250 - தொகுப்பு - 3

Show More

ஸ்ரீஅகஸ்திய விஜயம்

ஸ்ரீஅகத்தியர் திருஅவதாரம்

அனைத்து லோகங்களிலும் மஹரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்களிடையே மலர்ந்த நல்லெண்ணங்களைத் திரட்டினாள் தேவி. பளிங்கெனப் பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மஹரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள் என்றும் இறைத்தவம் புரியும் இறையடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் புனிதமான ஒரு நல்லெண்ணத்தைத் தேவி வடித்து எடுத்தனள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது!


ஆஷா சுவாஸினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது “ஹரிஹரா! சிவ-விஷ்ணு ரூபர்களே! தங்களிருவருடைய ஒப்பிலா இறைசக்தியை, அடியேன் பகுத்து வடித்துள்ள இந்த நல்லெண்ணத்தின் மூலக்கருவாய் அமைத்து, அரியும் சிவனு சேர்ந்த அரிசி யாய் மாற அருள்பாலிப்பீர்களாக” என்று பிரார்த்திக்க ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினர் . அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசி! தேவி அரிசியை இயற்கை மாற்றங்களினின்றும் காக்க அடுத்ததோர் பரிசுத்தமான நல்லெண்ணத்தை அதற்கு உறையாக அமைக்க உமி மூடிய அரிசியே “நெல்” தாவரமாயிற்று. கோடிக்கணக்கான ஜீவன்களின் மூல உணவாக இன்றைய உலகில் நெல் சார்ந்த அரிசி, தவிடு வைக்கோல் போன்றவையே இலங்குகின்றன.


ஆஷா சுவாஸினியின் அற்புதமான சிருஷ்டிப் பணி மேலும் தொடர்கிறது ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப் பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத் தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! 


எனவே தேவி “யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை நல்லெண்ணங்களை உடையவரோ அவர் இந்த நெல் மணியைத் தன் கையில் தாங்கிப் பிரார்த்தித்தால் இந்த நெல்மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்” என்றாள். இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்து பலர் மௌனமாயினர். இறைவனின் லீலையன்றோ! தகுதி பெற்றிருந்தும் பலர் முன்வராததால் தேவி யோசித்தாள். சிவனை வணங்கி “சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனே முடியும்” என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க ,


அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்மகனே அகத்தியா வா!

என்று தேவி அழைக்க மண்ணுக்கும் விண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீஅகத்தியர் தேஜோமயமாய், ஒளிப் பிழம்பாய் கோடி கோடியாம் ஆதவர்களின் அருட்பிரகாசத்துடன் ஆங்கே எழுந்தருளினார் .


எளிமையான அர்த்தம் கொண்டதாய்த் தோன்றும் இந்த அகத்திய தோற்றப் பாசுரத்தில், அர்த்தங்களுக்குள் பதியாததாய், எத்தனையோ சூக்குமமான பீஜாட்சர சக்திகள் குவிந்துள்ளன. அர்த்தத்தில் மட்டும் உறையாது, கோபி மாதாக்கள் போல் இதில் ஆழ்ந்த நம்பிக்கை பழுத்தால், அளப்பரிய பீஜசக்திகள் நல்வரங்களாய்க் கொழித்து மொழிந்து அருள்வதாம். சித்தர்கள் கிரகித்து அருளிய இந்த எளிய அகத்தியத் தோற்றச் சூத்திரப் பாத்துறையில், எண்ணற்ற ஆத்ம ஜோதிகள் கிளைக்கின்றன. ஆன்ம சக்திகள் கொழிக்கும் சித்த புவனப் பாசுரமிது. வெறும் இலக்கணத்திலும், இயலிலும் மட்டும் முழங்கிடாத தெய்வப் பேரொளிக் கழல். காலையில், முதலில் வலது காலை பூமியில் வைத்து எழுந்து உள்ளங்கை தரிசனங் கொண்ட பிறகு, இதனை மும்முறை ஓதி, அவரவருக்கான குருவைத் தொழுது வரவும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்


Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. 

ACCEPT