ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
தம் சற் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகளின் குருவருட் கடாட்சத்தால், தம் பூர்வ ஜென்ம, குருகுலவாச தவ, பூஜா சக்திகளின் திரண்ட வடிவமாய், பல பீஜாட்சர சக்திகளை எளிய வார்த்தைகளில் பதித்து நமக்கு அளிக்கப்பட்டதே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அந்தாதியாகும் மனிதன் பிறவிக் கடலைக் கடக்க உதவும் பெரும் தெப்பம் இது ஒவ்வொரு அந்தாதிப் பாடலும் சாதாரண மனிதனுடைய பலவிதமான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல தெய்வீக மாமருந்தாய், அமிர்தமாய்த் திகழ்கின்றது மகான்களின் திருவாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் திருப்பாற் கடலிலிருந்து, திருக்கயிலாயத்திலிருந்து, ஸ்ரீசக்ர மண்டலத்திலிருந்து தெளிக்கின்ற அருட்பிரகாச அமிர்த மொழிகளாகும்!
If you're looking for a wish to be fulfilled, recite the specific andhaadhi song which fulfills that wish 108 or 1008 times daily for 21 consecutive days. This is where the (wish fulfilling) sadhana begins. It should be continued from thereon. (As pointed out before, the wish fulfulling power of every one of these songs is listed in the last few pages of the andhaadhi book. Choose that song which is imbued with the wish fulfilling power that you seek. However, see below for what you are given if you don't ask for anything. )What's a product or service you'd like to show.
But reciting the andhaadhi songs or singing them without asking for anything in return, purely out of bhakti (devotion) for Mother Angaali, is the best way. This yields gnana (spiritual enlightenment).
இப்பாடல்கள் அனைத்தும் தேவியின் மூலமந்திர எழுத்துக்களின் பூரண சக்திதனை நூறு பாடல்களாய்ப் பிரித்து, கடைசிப் பாடலில் கருணையைச் சேர்த்து 'க' என்னும் மூலசக்திதனை விளக்கும் பயனாக அம்மன் அருளால் அமைகின்றன.
ஒரு சதுர்யுகம் என்பது சுமார் 43,20,000 ஆண்டுகள் கொண்டது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம், ஒரு மனுவானவர் ஆட்சி செய்யும் காலம். இத்தகைய 14 மனுக்களின் ஆட்சிக் காலம் சேர்ந்ததே ஒரு கல்பம். இது பிரம்மாவிற்கு ஒரு பகல். இத்தகைய ஒரு பகலும் இரவும் சேர்ந்ததே 365 நாட்களைக் கொண்ட ஒரு பிரம்மாவின் வருட காலத்தைக் கணித்தால் அது எத்தனை கோடி ஆண்டுகள் வரும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த பிரம்ம ஆண்டுகள் நூறு சேர்ந்ததே ஒரு பிரம்மாவின் ஆயுள். இது போல் ஒரு லட்சம் பிரம்மாக்களின் சக்தியைப் பெற்றவரே ஸ்ரீஔர்வ மகரிஷி என்றால் அப்பெருமானின் சக்தியையோ ஆயுளையோ எவராலும் கணக்கிட்டு, அளவிட்டுக் கூற முடியுமா ? இத்தகைய மகரிஷியின் ஆயுளையும், சக்தியையும் கணக்கிட்டுக் கூற வல்லவர் நம் சற்குரு என்றால் நம் சற்குருவின் சக்தியை எப்படி எவராலும் வாய்விட்டுக் கூறத்தான் முடியும் ?
ஒருவரின் சக்தி என்று எதைக் கூறுகிறோம். இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது, “ஒருவர் எத்தனை ஆண்டுகள் தான் என்ற எண்ணம் இன்றி தவமியற்றுகிறாரோ அதையே அவருடைய சக்தியாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்,” என்றார். அதாவது ஒருவர் நூறு பிரம்ம ஆண்டுகள் தவமியற்றுகிறார் என்றால் அவர் நூறு பிரம்மாக்களின் சக்தியைக் கொண்டவராக ஏற்றுக் கொள்ளப்படுவார். அப்படியானால் ஸ்ரீஔர்வ மகரிஷியின் சக்தியைப் பற்றிக் கூறவல்லவரின் சக்தி எத்தகைய பெருமை உடையதாக இருக்கும்.
கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டமான சக்தியை உடைய நம் சற்குருவும் பூமியில் அவதரிக்கும்போது புனித பூமியின் தன்மையாக “அவரும்” ஒரு ஆசையுடன்தான் பிறக்கிறார். என்ன ஆசை அதுவோ ? அதுவே, குருவாகி நீ (அங்காளித் தாய்) எனக்கு வர வேண்டும், என்பதே. அந்த ஆசை நிறைவேறியதா என்பதை தம் அடியார்களுக்கு உணர்த்துவதே இந்த அங்காளித் துதியின் மகிமையாகும்.
குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே
உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேண்டுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே.
We use cookies to analyze website traffic and optimize your website experience.