ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
அசுவினி:
வருவன கண்டேன் வளர்மதி திருஅஸ்வினி அருள் பூண்டு
இருவினை களையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே
வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே போற்றி!
பரணி:
திருஅருள் புரியும் தீச்சுடர் பரணி அருள் பூண்டு குரு அருள் பூண பூரண இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே
கண்டமர் கருணைத் திருஒளியே
காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே போற்றி!
கார்த்திகை
யாதும் பெருமையுற கீர்த்தி கிருத்திகை அருள்பூண்டு ஏதுசெய்யினும் நலமே விளையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே
பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே
எங்கும் தீபச் சுடர் ஒளியே
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே போற்றி!
ரோகிணி:
மாதர் பிழை களைய மனமிரங்கும் ரோகினி அருள் பூண்டு
வேதம் ஓதுவோர் துணையாகும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே
தாயாய் வந்த அருள் ஒளியே
தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே போற்றி!
மிருகசீரிஷம்:
மலை அருவி எனப் புகழ் சிதறும் மிருகசீருஷ அருள் பூண்டு
மனைவி துயர் நெருங்காது அருள் புரியும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே
வேதம் ஆனாய் பேரொளியே
வெற்றி யருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே போற்றி!
திருவாதிரை:
வாழியெம் போற்றி என்றேத்தும் வளம்பெரு ஆதிரை அருள் பூண்டு
ஆழி முதல்வனாகி நின்ற இரட்டைக் கணபதி பாதக் காப்பே!
தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே
நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே போற்றி!
We use cookies to analyze website traffic and optimize your website experience.