ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
நம் சற்குரு இப்பூவுலகில் தோன்றியதற்கான காரணங்கள் எத்தனை எத்தனையோ, அவற்றை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் பகுத்துணர முடியாது என்றாலும் நம் சற்குரு மனிதனாக ஆற்றிய அருஞ்செயல்கள் நம்மை பிரமிக்க வைப்பவையே. கோவணாண்டிப் பெரியவர் அருளிய வண்ணம் சென்னை மற்றும் இந்தியா முழுவதிலும் சுமார் அல்ல, சரியாக 3000 சொற்பொழிவுகளை ஆற்றி இறைப் பேரருளை மக்கள் சமுதாயம் உணர்ந்து பயன் பெற வழிவகை செய்தவரே நம் சற்குரு.
இந்த பிரம்மாண்டமான சமுத்திரத்தின் ஒரு துளியான சில சொற்பொழிவுகளையே நாம் இங்கு கேட்கும் பயன் பெறுகிறோம். இவற்றுள் முதன்மையாகத் திகழும் ‘அனைவர்க்கும் தாய் சிவனே’ என்ற சொற்பொழிவு நம் சற்குரு நிகழ்த்திய 1000வது சொற்பொழிவு என்பதே இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.
சிவபெருமானின் உடுக்கை ஒலியில்தான் உலகங்கங்கள் தோன்றுகின்றன மறைகின்றன என்பது போல நம் சற்குரு ஆற்றிய இந்த சொற்பொழிவுகளில் எல்லாம் கோடிக் கணக்கான லோகங்கள் தோன்றின, நம் சற்குரு அருளால் செறிவூட்டப்பட்டன, மறைந்தன என்பதே இந்த சொற்பொழிவுகளில் மறைந்துள்ள மகாத்மியமாகும். இந்த சொற்பொழிவுகளில் இடம் பெறும் உடுக்கை ஒலியும் இதைக் குறிப்பதே. இந்த உடுக்கை ஒலியை உன்னிப்பாகக் கேட்டு அது கூறும் செய்திகளை உணர முடிந்தால் நாம் எதிர்காலத்தையே உணர்ந்தவர்கள் ஆவோம்.
முயற்சி திருவினையாக்கும்.
1980ம் ஆண்டிலிருந்துதான் நம் சற்குருவின் உரையாடல்களை அடியார்கள் ஒலி நாடாவில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். 1986ம் ஆண்டு, “நீங்கள் இப்போது பதிவு செய்வதைப் போல் அடியேன் பேசிய அனைத்தையும் நீங்கள் பதிவு செய்திருந்தால் அது இந்நேரம் ஒன்றரை லட்சம் கேசட்டுகளைத் தாண்டியிருக்கும்...”, என்றார் நம் சற்குரு. அப்படியானால் இறைவனைப் பற்றி, இறை லீலைகளைப் பற்றி நம் சற்குரு ஆற்றிய சொற்பொழிவுகளை கணக்கில் வரையறுக்க முடியுமா?
சரி, போனது போகட்டும் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆன்மீகப் பொக்கிஷங்களையாவது நன்முறையில் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ அண்ணாமலையானின் திருப்பாதங்களைப் பணிகின்றோம்.
short clips u can hear here.... for full audios check in http://kulaluravuthiagi.org/lecture.htm
ஶ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளிவந்த கீழ்க்கண்ட பலாபலன்கள் குறிப்பிட்ட வருட , மாத, தேதிகளுக்கான குருவாய்மொழிகள் ஆகும்… ஏனெனினும் குருவருளால் கனிந்த இத்தகைய அரிய தேவ தெய்வ நாமங்களை ஓதி கிரிவலம் , ஆலய வலம் வருதல் பெறுதற்கரிய பேறன்றோ ..! குருவருள் திருவருள் கனிந்திடில் பலன்களும் கனியலாமே!
‘சகசன்யை’ என்ற தேவி மூர்த்தி - தம்பதிகள் மனம் ஒத்து வாழும் நல்லாசியைப் பெறலாம்.
இரத சித்திரன் என்ற யட்ச தேவ மூர்த்தி - – இரத சித்திரனின் ஆசியைப் பெற்று கணவனை எதிர்த்துப் பேசி, வாதாடி உருவாக்கிய சச்சரவுகளுக்கும், மன வேற்றுமைகளுக்கும் பரிகாரம் பெறலாம்.
மறைகளுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீலகுளீசர் - வாய்க் குற்றங்கள் தணியும், வாக் சக்தி பெருகும்.
ஆவிகளை அடக்கும் தலைவராகிய ஐங்கர தேவமூர்த்தி - பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் ஆவி சம்பந்தமான துன்பங்கள் தீரும்.
ஸ்ரீசுபர்திமான் மஹரிஷி - வைத்தியர்கள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் - நற்பலன்கள், கீர்த்தி, புகழ், விருதுகள் பெறுவர்.
கீர்த்திமதி தேவிமூர்த்தி - நுணுக்கமான பணிகள் உள்ள தொழிலிலும், அணு சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டோரும் நலம் பெறுவர்.
திருஅண்ணாமலையாரை “வியபோகன” தோத்திரத்தைத் துதித்துக் கொண்டே கிரிவலம் வருவதால் – ஆச்சரியமான பலன்களைப் பெறலாம்.
அந்தகன் என்ற தேவமூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்து ஈசன் கரம் பட்டுப் பொன்னிறமான நாள் – பொற்கொல்லர்கள், தங்க வியாபாரிகள் வந்து சிவனருள் பெறும் நாள்!
கிரதஸ்தலை என்ற அப்சரஸ் தேவி மூர்த்தி - குடும்பக் கஷ்டங்கள் தணியும்!
“இரத பிருது” என்ற யட்ச தேவதை தாம்பூலம் தானம் செய்து கிரிவலம் வரும் - எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம். வியாபார, அலுவலகப் பகைமை தணியும்.
“ஊரு” என்ற கந்தர்வ தேவர் - பெற்றோர்களுக்கும், தாத்தா, பாட்டிமார்களுக்கு முறையாக சேவை செய்யாதோர் ஈமக் கிரியை செய்யாதோர் இந்த கிரிவலத்தினால் தக்க பரிஹாரங்கள் பெற வழியுண்டு. இசைக் கலைஞர்கள் இன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் புகழ், கீர்த்தி, செல்வம் மற்றும் நலம் பெறுவர்.
ஸ்ரீபிரம்மலோசனை என்ற அப்சரஸ் தேவி மூர்த்தி - அழகின்மை காரணமாக வருத்துகின்றவர்களுக்கு வேதனை கொண்டுள்ளோர்க்கு நல்வரங்களைப் பெற்றுத் தர ஸ்ரீபிரம்மலோசனை கிரிவலப் பலன்களை அருள்கின்றனள்.
வியாட்டரதன் என்ற தேவலோக ரட்சா தேவமூர்த்தி திருஅண்ணாமலையாரை வலம் வந்து சூரியன் அருள் சகாயராய் (Body Guard) உதவ வந்த நாளிது.
சங்கபாலன் என்ற நாகதேவ மூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்து நாகலிங்க பூஜை செய்தவர்களுக்கு நன்முறையில் உத்தியோகம் மாற்றம் பெற அருள்வார்.
“ஆஹாஊஹு” என்ற அற்புத கந்தர்வர், கானம் பாடி திருஅண்ணாமலையாரை வலம் வருவோர்க்கு காரிய சாதனை பெற அருளாசியைத் தரும் நாளிது. சஹஸ்ரநாமத் துதியில் “ஆஹாஊஹு” என்ற நாமத் துதி வருவது குறிப்பிடத்தக்கது.
ஓம் ஶ்ரீகுருவே சரணம்
We use cookies to analyze website traffic and optimize your website experience.